

தொழிலதிபர் அனில் அகர் வாலுக்குச் சொந்தமான வேதாந்தா குழும நிறுவனங் களுள் ஒன்றான பால்கோ ஆலையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கோர்பா எனுமிடத்தில் அமைந்துள்ள இந்த ஆலையை மூடுவதற்கான பணிகளை இந்நிறுவனம் தொடங் கியுள்ளது. இதனால் 1,000 பேர் வேலையிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் அலுமினி யத்தின் விலை கடுமையாக சரிந்து வருவதாலும், அதிக அளவில் சீனாவிலிருந்து அலு மினியம் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதாலும் அலுமினிய தகடுகள் உற்பத்தியை நிறுத்துவதென கடந்த மாதம் இந்நிறுவனம் முடிவு செய்தது.
இந்த ஆலையில் அலுமினிய தகடுகள் உற்பத்தியை நிறுத்தும் பணியை அதிகாரபூர்வமாக மேற்கொள்ள இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில தொழிலாளர் அமைச்சகத்துக்கும் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ பங்குச் சந்தைகளுக்கும் பால்கோ நிறுவனம் தகவல் அனுப்பியுள்ளது.
சுரங்கத்தொழிலில் ஈடுபட் டுள்ள வேதாந்தா லிமிடெட் நிறுவனம் பால்கோ நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வைத் துள்ளது. எஞ்சிய 49 சதவீத பங்குகள் அரசு வசம் உள்ளன.
இந்த ஆலையில் ஆண்டுக்கு 30 ஆயிரம் டன் அலுமினிய தகடுகள் மற்றும் காயில்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த ஆலையை டிசம்பர் 8, 2015-க்குள் மூடுவதென முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு இந்நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. தொழில் தாவா தீர்வு சட்டம் 1947-ன் படி மூன்று மாதங்களுக்கு முன்பாக இவ்விதம் கடிதம் அனுப்ப வேண்டும்.
பால்கோ ஆலையில் அலுமினிய தகடுகள் உற்பத் தியை நிறுத்திவிட்டு ஆலையை மறு சீரமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதனால் ஆயிரம் பேர் வேலையிழப்பர் என அஞ்சப்படுகிறது.
சர்வதேச சந்தையில் அலுமினியத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு டன் 2,200 டாலராக இருந்த அலுமினியத்தின் விலை செப்டம்பர் மாதத்தில் ஒரு டன் 1,600 டாலராக சரிந்துவிட்டது. இதனால் அலுமினிய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும் சீனாவிலிருந்தும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் குறைந்த விலையில் அலுமினியம் இறக்குமதி செய்யப்பட்டதால் உள்நாட்டு உற்பத்தியாளர்களால் போட்டியிட முடியவில்லை.
அலுமினியத் தயாரிப்புக்கு முக்கியமான மூலப்பொருளாக விளங்கும் பாக்சைட் தாது மற்றும் உற்பத்திக்குத் தேவை யான மின்சாரமும் இங்கு பற்றாக்குறையாக உள்ளது. இதனால் பால்கோ ஆலையின் செயல்பாடு முடங்கியது. இந்த ஆலைக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப் படுகிறது. அதாவது பால்கோ செயல்படுத்தும் 2 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி தேவைப்படுகிறது. இவற்றில் பெருமளவு இறக்குமதி மூலம் ஈடுகட்டப்படுகிறது.