Published : 19 Aug 2020 04:59 PM
Last Updated : 19 Aug 2020 04:59 PM

தெருவோர வியாபாரிகளின் கடன் விண்ணப்பங்களைச் சரிபார்க்க மொபைல் செயலி அறிமுகம்

தெருவோர வியாபாரிகளின் கடன் விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் உகந்த டிஜிடல் தளமாக செயல்படும் கைபேசிச் செயலி தொடங்கப்பட்டுள்ளது.

தெருவோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மீண்டும் தொடங்குவதற்கு மூலதனக்கடன் வழங்கத் தொடங்கபட்டுள்ள பிரதமர் தெருவோர வியாபாரிகள் தற்சார்பு நிதி குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மாநிலங்களின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர்கள், தலைமைச் செயலர்கள், நகர்ப்புற வளர்ச்சி துறைச் செயலர்கள், முதன்மைச் செயலர்கள், டிஜிபிக்கள் , மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், சிறப்புக் கண்காணிப்பாளர்கள், 125 நகரங்களின் ஆணையர்கள், தலைமைச் செயல் அலுவலர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இந்தத் திட்டம் வியாபாரிகளுக்குக் கடன் உதவி வழங்குகிறது. தொல்லையற்ற சூழலில் அவர்கள் தொழில் நடத்துவதை உறுதி செய்வது அவசியமாகும். இந்தக் கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகச் செயலர் துர்கா சங்கர் மிஸ்ராவும் உடன் இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு கைபேசிச் செயலி ஒன்றை தொடங்கினார். தெருவோர வியாபாரிகளின் கடன் விண்ணப்பங்களுக்கு ஏற்ற டிஜிட்டல் தளமாக இந்தச் செயலியைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இது துவங்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து இதற்கான பின்னூட்டங்களை மத்திய அமைச்சர் பெற்றுள்ளார். பிரதமரின் தெருவோர வியாபாரிகள் தற்சார்பு நிதித் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தவும், தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்யவும், சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களுடன் கூட்டங்களை நடத்தி ஆலோசிக்குமாறு நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மாநில அமைச்சர்களுடன் நடைபெற்றக் கலந்துரையாடலின் போது, இத்திட்டத்தின் பயனாளிகளின் முழுமையான சமூகப் பொருளாதாரப் பின்புலம் குறித்து அறிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. பிரதமர் ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்), ஆயுஷ்மான் பாரத், உஜ்வாலா, ஜன்தன் திட்டம், சௌபாக்யா, தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் (Deendayal Antyodaya Yojana-National Urban Livelihoods Mission -DAY-NULM) போன்ற அரசின் இதர நலத்திட்டங்களில் அவர்களது நடவடிக்கைகள் இதில் அறிந்து கொள்ளப்படும்.

இந்தக் கலந்துரையாடலின் போது, திரு. ஹர்தீப் பூரி, “பழங்கால வண்டிகளுக்குப் பதிலாக நவீன தள்ளுவண்டிகளை வாங்குவதற்கான முத்ரா, DAY-NULM கடனுதவி போன்ற இதர திட்டங்களை வியாபாரிகளின் பொருளாதார மேம்பாட்டுக்காக ஒருங்கிணைக்க மாநிலங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

காவல்துறையினர்/நகராட்சி அதிகாரிகளின் தேவையற்ற தொல்லைகள் விஷயத்தில் தவறிழைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் பொறுப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

சுமுகமான சூழலில், பயனாளிகளின் குறைகளைக் களைந்து அவர்களுக்கு உதவும் வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில், காவல்துறை/நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொருத்தமான துறைகளின் பிரிதிநிதிகளைக் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். உருவாக்கப்படும் இந்த அமைப்பு குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது கூடவேண்டும்’’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x