தங்கம், வெள்ளி விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன?

தங்கம், வெள்ளி விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன?
Updated on
1 min read

தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 குறைந்து ரூ.5156 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.248 குறைந்து ரூ.41248க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 43312 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 2.60 ரூபாய் குறைந்து 74.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in