

10 நேரடி அந்நிய முதலீட்டுத் திட்டங்களுக்கு (எப்டிஐ) மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 139.95 கோடியாகும்.
அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (எப்ஐபிபி) பரிந்துரையின் பேரில் நிதி அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அனுமதி கோரிய திட்டப் பணிகளில் 7 முதலீட்டுத் திட்டப் பணிகள் ரத்து செய்யப்பட்டன. 5 திட்டப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.