ஏப்ரல்-ஜூலை பயணிகள் வாகன விற்பனை 63%, இருசக்கர வாகன விற்பனை 60.54% சரிவு

ஏப்ரல்-ஜூலை பயணிகள் வாகன விற்பனை 63%, இருசக்கர வாகன விற்பனை 60.54% சரிவு
Updated on
1 min read

ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் பயணிகள் வாகன விற்பனை 63% சரிய, இருசக்கர வாகன விற்பனை 60.54% ஆக சரிவு கண்டுள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஜூலையில் மொத்த வாகனங்கள் விற்பனை 3.86% சரிவு கண்டு 1 லட்சத்து 82 ஆயிரத்து 779 ஆகக் குறைந்தது.

அதே போல் 2020 ஜூலையில் இருசக்கர வாகனங்களின் விற்பனை 15.24% குறைந்து 12,81,354 ஆகக் குறைந்தது. அதே போல் ஜூலை மாதத்தில் வாகன உற்பத்தியும் குறைந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது வாகன உற்பத்தி 29.36% குறைந்தன.

ஏப்ரல்-ஜூலை காலக்கட்டத்தில் பயணிகள் வாகன விற்பனை 63% சரிந்து 3 லட்சத்து 36 ஆயிரத்து 513 ஆகக் குறைந்தது. இருசக்கர வாகன விற்பனை 60.54% சரிவடைந்து 25 லட்சத்து 74 ஆயிரத்து 467 யூனிட்களாக உள்ளன.

ஆனால் இது தொடர்பாக வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நம்பிக்கையுடன் கூறும்போது, “ஜூலை மாதம் குறிப்பிடத்தகுந்த அளவில் முந்தைய மாதங்களை ஒப்பிடும் போது கொஞ்சம் பரவாயில்லை” என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in