

கோவிட்-19 காலத்தில், வீட்டில் இருந்தபடியே உமாங் செயலி மூலமாக தங்குதடையின்றி சேவைகளைப் பெற இபிஎப்ஓ நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதிய மின் அரசாளுமைக்கான யூனிஃபைட் அலைபேசி செயலி (UMANG) ஊழியர் வருங்கால வைப்புநிதி (இபிஎஃப் ஓ) சந்தாதாரர்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த செயலி கோவிட்-19 காலத்தில், அவர்கள் வீட்டில் இருந்தபடியே தங்குதடையின்றி இபிஎப்ஓ சேவைகளைப் பெற உதவியது.
தற்போது பிஎஃப் சந்தாதாரர் ஒருவர், இபிஎப்ஓ வில் பதினாறு விதமான சேவைகளை ‘உமாங்’ செயலி மூலமாக தங்களது அலைபேசியிலேயே பெற முடியும்.
கோவிட்-19 காலத்தின் போது ஏப்ரல் முதல் ஜூலை 2020 வரையிலான காலத்தில், இந்தச் செயலி மூலமாக இணைய வழியாகவே 1.27 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இது கோவிட்டுக்கு முந்தைய காலத்தை விட 180 சதவிகிதம் அதிகமாகும். டிசம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரையிலான காலத்தில் இந்தச் செயலி மூலமாக 3.97 லட்சம் கோரிக்கைகள் வரப்பெற்றன. இபிஎப்ஓ அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்றுதான் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் செய்தது இந்தச் செயலி.
இபிஎப்ஓ வின் பல்வேறு சேவைகளும் இந்தச் செயலியின் மூலமே கிடைக்கின்றன. உமாங் செயலி மூலமாக ‘உறுப்பினரின் பாஸ் புத்தகத்தை பார்ப்பது’ என்ற சேவை மிகவும் பிரபலமடைந்தது. ஆகஸ்ட் 2019 முதல் ஜூலை 2020 வரையிலான காலத்தில். இபிஎப் உறுப்பினர்கள் இபிஎப்ஓ உறுப்பினர் இணையதளம் மூலமாக 27.55 கோடி முறை பார்த்துள்ளனர். ஆனால் உமாங் செயலி மூலமாக 244.77 கோடி முறை இந்தச் சேவையைப் பயன்படுத்தியுள்ளனர். தங்களுடைய அலைபேசியில் உள்ள செயலிகள் மூலமாக ஒரு தொடுகையில் கிடைக்கின்ற விவரங்கள் காரணமாக உறுப்பினர்கள் இந்தச் செயலிக்கு முன்னுரிமை அளித்துள்ளனர்.
66 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களது இல்லங்களிலேயே பாதுகாப்பான சேவை கிடைப்பதற்காக ஓய்வூதியதாரர்களின் பாஸ் புத்தகத்தைப் பார்த்துக் கொள்ளும் வசதியையும் ஈபிஎஃப்ஓ அளித்தது ஜீவன் பிரமாண் பத்திரங்களை அப்டேட் செய்து கொள்வதற்கான வசதியும் இந்தச் செயலியில் உண்டு.
இந்த இரண்டு சேவைகளுக்கும் தற்போதுள்ள ஓய்வூதியதாரர்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். கோவிட்-19 காலத்தில் ஏப்ரல் முதல் ஜூலை 2020 வரையிலான காலத்தில், “ஓய்வூதியதாரர்கள் பாஸ் புத்தகத்தைப் பார்க்கலாம்” என்ற சேவைக்கு 18.52 லட்சம் ஏ பி ஐ ஹிட்டுகள் கிடைத்தன. ஜீவன் பிரமாணப் பத்திரத்தை அப்டேட் செய்யும் சேவைக்கு 29 ஆயிரத்து 773 ஹிட்டுகள் கிடைத்தன. மற்ற முக்கிய சேவைகள் யுஏஎன் ஆக்டிவேஷன் 21 27 942 ஏ பி ஐ ஹிட்டுகள்; இ கே வைசி சேவை 13,21,07,910ஏ பிஐ ஹிட்டுகள் (காலம் ஏப்ரல் முதல் ஜூலை 2020 வரை).
உமாங் செயலியின் சேவைகளைப் பயன்படுத்தியவர்களில் 90 சதவிகிதம் பேர் இ பி எஃப் ஓ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தச் செயலியை மிகப் பெருமளவில் பயன்படுத்தும் அமைப்பாக இபிஎப்ஓ உள்ளது.