சீனா ஏற்றுமதியில் 70% பங்களிப்புள்ள 10 துறை வணிகங்கள்; சிறு குறு தொழில்துறையினர் கவனம் செலுத்த நிதின் கட்கரி வலியுறுத்தல்

சீனா ஏற்றுமதியில் 70% பங்களிப்புள்ள 10 துறை வணிகங்கள்; சிறு குறு தொழில்துறையினர் கவனம் செலுத்த நிதின் கட்கரி வலியுறுத்தல்
Updated on
1 min read

சீனாவில் 10 துறை சார்ந்த வணிகம் மட்டுமே அந்நாட்டின் ஏற்றுமதியில் 70 சதவீத பங்களிப்பை செலுத்தி வருவதாகவும், இதனை கண்டறிந்து உள்நாட்டில் அதனை உற்பத்தி செய்ய சிறு, குறு தொழில்கள் துறையினர் முன் வர வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்தியா @75 உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

சமீபத்தில், குறு, சிறு, நடுத்தரத் தொழிற்துறை (MSME) சற்றே விரிவுபடுத்தப்பட்டு, 50 கோடி வரை முதலீட்டு மதிப்புள்ள தொழில் மற்றும் 250 கோடி வரை விற்றுமுதல் ஆகியவை குறு, சிறு, நடுத்தரத் தொழிற்துறையின் (MSME) புதிய வரையறையாக கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், ஆகியவை குறு, சிறு, நடுத்தரத் தொழிற்துறையின் (MSME) கீழ் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் இரண்டிற்கும் ஒத்த வரையறைகளை வழங்குவதன் மூலம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

சீனாவில் 10 துறை சார்ந்த வணிகம் மட்டுமே அந்நாட்டின் ஏற்றுமதியில் 70 சதவீத பங்களிப்பை செலுத்தி வருகின்றன. இந்தியா அந்த 10 துறைகளில் தான் சீனாவை நம்பியிருக்கும் சூழல் உள்ளது. இதனை கண்டறிந்து அது சார்ந்த உற்பத்தியை நாம் பெருக்க வேண்டும் தற்சார்பு திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே அதனை நாம் உற்பத்தி செய்ய சிறு, குறு தொழில்கள் துறை கவனம் செலுத்த வேண்டும்.

தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் குறு, சிறு, நடுத்தரத் தொழிற்துறையில் (MSME) புதிய ஏற்றுமதி வழிகளையும் இந்தியா காணலாம். இது ஏராளமான துணைத் தொழில்களையும் வளர்க்க உதவும்.

வங்கிகளின் உத்தரவாதத் (பி.ஜி) தேவையை நீக்கும் பாதைகளைக் காப்பீடு செய்வதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். இது சாலைத் திட்டங்களுக்கு நிதி மூடுவதையும், நிதி திரட்டுவதையும் துரிதப்படுத்தும், இதன் மூலம் திட்டப்பணி வேகமாக முடிவடையும். ஏற்கனவே முன்மொழியப்பட்ட 22 புதிய பசுமை எக்ஸ்பிரஸ்வே திட்டங்களை மேலும் மேம்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in