சிறு, குறு தொழில் வளர்ச்சி வாய்ப்புள்ள 115 மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம்: நிதின் கட்கரி தகவல்

சிறு, குறு தொழில் வளர்ச்சி வாய்ப்புள்ள 115 மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம்: நிதின் கட்கரி தகவல்
Updated on
1 min read

115 சிறப்பு மாவட்டங்களில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை தடம் பதித்து மேம்படுத்தப்படுவதை கட்கரி வலியுறுத்தினார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று, இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்தியா @75 உச்சி மாநாடு: இயக்கம் 2022 என்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

நாட்டின் 115 அடையாளம் காணப்பட்ட சிறப்பு மாவட்டங்களில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையின் (MSME) இருப்பை மேம்படுத்துவதற்கான அவசரத் தேவை உள்ளது என்றார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பு தற்போது மிகக் குறைவு, ஆனால் அவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டால், இவை வேலைவாய்ப்பை பெரிய அளவில் மேம்படுத்தலாம்.

மிகச்சிறிய அலகுகளை, அவற்றின் குறுந்தேவைகளுக்கு வழங்குவது தொடர்ப்பாக குறு சிறு, நடுத்தரத் தொழிற்துறை வரம்பின் கீழ் சேர்ப்பதற்கான ஒரு திட்டத்தின் மீது அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். சமீபத்தில், குறு, சிறு, நடுத்தரத் தொழிற்துறை (MSME) சற்றே விரிவுபடுத்தப்பட்டு, 50 கோடி வரை முதலீட்டு மதிப்புள்ள தொழில் மற்றும் 250 கோடி வரை விற்றுமுதல் ஆகியவை குறு, சிறு, நடுத்தரத் தொழிற்துறையின் (MSME) புதிய வரையறையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆகியவை குறு, சிறு, நடுத்தரத் தொழிற்துறையின் (MSME) கீழ் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் இரண்டிற்கும் ஒத்த வரையறைகளை வழங்குவதன் மூலம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும், பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு இந்தியக் கைத்தொழில் பிரதிநிதிகளின் கூட்டமைப்புக்கு கட்கரி அழைப்பு விடுத்தார். சீனாவின் உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டிய அவர், அங்கு முதல் 10 வணிகப் பிரிவுகள் அந்நாட்டின் ஏற்றுமதியில் 70 சதவீதம் பங்களித்ததை சுட்டிக் காட்டினார்.

தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் குறு, சிறு, நடுத்தரத் தொழிற்துறையில் (MSME) புதிய ஏற்றுமதி வழிகளையும் இந்தியா காணலாம். இது ஏராளமான துணைத் தொழில்களையும் வளர்க்க உதவும், என்றார்.

வங்கிகளின் உத்தரவாதத் (பி.ஜி) தேவையை நீக்கும் பாதைகளைக் காப்பீடு செய்வதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குமாறு கட்கரி CII பிரதிநிதிகளை கேட்டுகொண்டார். இது சாலைத் திட்டங்களுக்கு நிதி மூடுவதையும், நிதி திரட்டுவதையும் துரிதப்படுத்தும், இதன் மூலம் திட்டப்பணி வேகமாக முடிவடையும். நாட்டில் சாலை சூழ்நிலை எவ்வாறு மாறுகிறது என்பதை அவர் விரிவாக எடுத்துக் கூறிய அவர், இது ஏற்கனவே முன்மொழியப்பட்ட 22 புதிய பசுமை எக்ஸ்பிரஸ்வே திட்டங்களை மேலும் மேம்படுத்தும் என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in