

மனிதவள பிரிவில் செயல்பட்டு வரும் நிறுவனமான டீம்லீஸ் பொதுப்பங்கு வெளியிட(ஐபிஒ) திட்டமிட்டிருக்கிறது. இதற்கான வரைவு திட்டத்தை செபியிடம் சமர்ப்பித்திருக்கிறது டீம்லீஸ் நிறுவனம். இந்த ஐபிஓ மூலம் 450 முதல் 500 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே இருக்கும் முதலீட்டாளர்களிடம் உள்ள 32.2 லட்சம் பங்குகளை வெளியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நிறுவனத்தின் பணியாளர்களுக்கு 10,000 பங்குகள் ஒதுக்கப்பட் டுள்ளன. டீம்லீஸ் நிறுவனத்தில் கஜா கேபிடல், இந்தியா அட்வாண் டேஜ், ஹெச்.ஆர். ஆப்ஷோர் வென்ச்சர்ஸ் மற்றும் ஜிபிஇ (இந்தியா) ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன.
20 வாடிக்கையாளார்கள், 40 பணியாளர்களுடன் இந்த நிறுவனம் 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது 8 மண்டல அலுவலகங்கள் மற்றும் 1,200 நபர்களுடன் இந்தி யாவின் முக்கியமான நிறுவன மாக இருக்கிறது. தற்காலிக பணியாளர்களை நியமிப்பது, நிரந் தர பணியாளர்களை நியமிப்பது, சம்பள நடைமுறைகள் உள்ளிட்ட பலவிதமான மனிதவள பணிகளையும் இந்த நிறுவனம் செய்கிறது.
ஐபிஓ மூலம் கிடைக்கும் நிதியை பயன்படுத்தி புதிய நிறுவனங்கள் வாங்குதல், தொழில்நுட்பத்தை மேம்படுத் துதல், வொர்க்கிங் கேபிடல் நிதியை பலப்படுத்துதல் உள் ளிட்ட இதர தேவைகளுக்காக நிதி திரட்டப்படுகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ மற்றும் என்.எஸ்.இ. ஆகிய பங்குச்சந்தையிலும் வர்த்தக மாகும்.
கடந்த சில வருடங்களாக ஐபிஓ சந்தை மந்தமாக இருந்த சூழ்நிலையில் இப்போது 30க்கும் மேற்பட்ட நிறுவனங் கள் ஐபிஓவுக்கு விண்ணப்பித் திருக்கின்றன.