தங்கக் கடன் பத்திரத் திட்டம்: வெளியீட்டு விலை எவ்வளவு?

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

தங்கக் கடன் பத்திரத் திட்டம் 2020-21 (வரிசை V) வெளியீட்டு விலை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தங்கக் கடன் பத்திரங்கள் 2020-21 வரிசை V) ஆகஸ்டு மாதம் 03 முதல் 7-ஆம் தேதி வரை திறந்திருக்கும். இதற்கான செட்டில்மென்ட் தேதி 11 ஆகஸ்டு 2020 ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை 31, 2020 அன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள படி, இந்தப் பத்திரத்தின் வெளியீட்டு விலை சந்தா காலத்தில் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5,334 ( ஐந்து ஆயிரத்து முன்னூற்றி முப்பத்து நான்கு மட்டும்) ஆகும்.

மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியைக் கலந்தாலோசித்த பிறகு இந்த திட்டத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து மின்னணு முறை மூலமாக பணம் செலுத்துபவர்களுக்கு 50 ரூபாய் (ஐம்பது ரூபாய் மட்டும்) தள்ளுபடி அளிக்க முடிவு செய்துள்ளது. இதுபோன்ற முதலீட்டாளர்களுக்கு வெளியீட்டு விலை கிராம் ஒன்றுக்கு ரூ 5,284 (ரூபாய் ஐந்து ஆயிரத்து இருநூற்றி எண்பத்து நான்காக) இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in