Published : 31 Jul 2020 08:21 PM
Last Updated : 31 Jul 2020 08:21 PM

மத்திய அரசின் வரவு- செலவு கணக்கு விவரம்: ஜூன் மாதம் வரை வெளியீடு

நடப்பு நிதியாண்டில் 2020 ஜூன் மாதம் வரையிலான மத்திய அரசின் கணக்கு ஒருங்கிணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;

மத்திய அரசு 2020 ஜூன் மாதம் வரையில், ரூ.1,53, 581 கோடி வருவாய் பெற்றுள்ளது (2020-21 மொத்த வருவாய் பட்ஜெட் மதிப்பீட்டில் 6.84%), இதில், ரூ.1,34,822 கோடி வரி வருவாய் ( நிகரம்) , ரூ.15,186 கோடி வரி அல்லாத வருவாய், ரூ.3,573 கோடி கடன் அல்லாத முதலீட்டு வருவாய் ஆகியவை அடங்கும்.

கடன் அல்லாத முதலீட்டு வருவாயில் , கடன்கள் மீட்பு அடங்கும் (ரூ.3,573 கோடி). இந்தக் காலகட்டத்தில், ரூ.1,34,043 கோடியை , மாநில அரசுகளுக்கு , வரிப் பகிர்வுத் தொகையாக மத்திய அரசு வழங்கியுள்ளது. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ. 14,588 கோடி குறைவாகும்.

மத்திய அரசின் மொத்த செலவு ரூ.8,15,944 கோடி (2020-21 பட்ஜெட் மதிப்பீட்டில் 26.82%) , இதில், ரூ.7,27, 671 கோடி வருவாய்க் கணக்கிலும், ரூ.88, 273 கோடி முதலீட்டு கணக்கிலும் உள்ளது. மொத்த வருவாய்ச் செலவில், 1,60,493 கோடி வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது. ரூ.78,964 கோடி, பெரிய மானியங்கள் கணக்கில் சேர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x