தங்கம் விலை மீண்டும் உயர்வு; பவுன் விலை ரூ. 41000 ஆக அதிகரிப்பு

தங்கம் விலை மீண்டும் உயர்வு; பவுன் விலை ரூ. 41000 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.5125-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ 41000க்கு விற்பனையானது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 43048 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து 70.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in