1.80 லட்சம் காதி நிறுவன முகக்கவசங்கள் வாங்க செஞ்சிலுவை சங்கம் ஆர்டர்

1.80 லட்சம் காதி நிறுவன முகக்கவசங்கள் வாங்க செஞ்சிலுவை சங்கம் ஆர்டர்
Updated on
1 min read

காதி முகக்கவசங்களின் சிறந்த தரம் மற்றும் கட்டுப்படியான விலை காரணமாக நாடு முழுவதும் அவற்றுக்கான நன்மதிப்பு வளர்ந்து வருவதால் காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையம் (KVIC) 1.80 லட்சம் முகக்கவசங்களை வழங்க இந்திய செஞ்சிலுவை சங்கத்திடம் (IRCS) இருந்து கொள்முதல் ஆணையைப் பெற்றுள்ளது.

காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையத்தின் படி இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கான முகக்கவசங்கள் 100 சதவிகிதம் இரட்டை முடிச்சுகளைக் கொண்ட கைத்திறனுடன் பருத்தித் துணியால் பழுப்பு நிறத்தில் சிவப்புப் பட்டையுடன் தயாரிக்கப்படும். காதி மற்றும் கிராமத் கைத்தொழில் துறை ஆணையம் இந்த இரட்டை அடுக்குகள் கொண்ட பருத்தி முகக்கவசங்களை இந்திய செஞ்சிலுவை சங்கத்தினருக்காக அவர்கள் வழங்கிய மாதிரிகளின் அடிப்படையில் சிறப்பாக வடிவமைத்துள்ளது.

முகக்கவசத்தின் இடதுபுறத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் அடையாளச் சின்னமும், வலது பக்கத்தில் காதி இந்தியா குறிச்சொல்லும் (tag) அச்சிடப்பட்டிருக்கும். முகக்கவசங்களை வழங்கும் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்.

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கொள்முதல் ஆணையை செயல்படுத்துவதற்கு 20,000 மீட்டர் துணிகள் தேவைப்படும். காதி கைவினைஞர்களுக்கு இது 9000 கூடுதல் பணி நாட்களை உருவாக்கும்.

காதி மற்றும் கிராமத் கைத்தொழில்துறை ஆணையம் இதுவரை இரட்டை அடுக்குகள் கொண்ட பருத்தி முகக்கவசங்கள், 3 அடுக்குகள் கொண்ட பட்டு முகக்கவசங்கள் உள்ளிட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட முகக்கவசங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. காதி மற்றும் கிராமத் கைத்தொழில்துறை ஆணையம் 7 லட்சம் முகக்கவசங்களுக்கான மிகபெரிய ஆணையை (ஆர்டர்) ஜம்மு – காஷ்மீர் அரசிடமிருந்து பெற்று, உரிய நேரத்தில் விநியோகம் செய்துள்ளது.

ரூ. ஒரு கோடிக்கும் மேல் மதிப்புள்ள, ஏறத்தாழ 1 லட்சம் மீட்டர் பருத்தித் துணி மற்றும் வெவ்வேறு வண்ணங்கள், அச்சுகளில் கிட்டத்தட்ட 2000 மீட்டர் பட்டுத் துணி ஆகியவை இந்த முகக்கவசங்களைத் தயாரிப்பதில் அண்மைக் காலம் வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in