

கடந்த 1904 ஜூலை 29-ல் பிறந்த ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ரத்தன் டாடா அவருடனான பயணத்தை நினைவுகூர்ந்துள்ளார்.
டாடா குழுமத்தின் தலைவர் 82 வயதாகும் ரத்தன் டாடா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜேஆர்டி டாடாவுடனான புகைப்படங்கள் இரண்டை பகிர்ந்து அவரை ‘ஜே’ என்று குறிப்பிட்டுள்ளார். அதில் ரத்தன் டாடா கூறியிருப்பதாவது:
ஜேஆர்டி டாடா நாட்டின் மிக உயரிய பத்ம விபூஷண், பாரத் ரத்னா விருதுகளைப் பெற்றுள்ளார். மிகச்சிறந்த தொழிலதிபர் மட்டுமல்ல டாடா குழுமத்தை பலஆண்டுகள் தலைமை வகித்து நடத்தி வந்திருக்கிறார். அதேசமயம் விமானியாகவும் இருந்தார்.
இந்திய விமான துறையின் தந்தையாகவும் பார்க்கப்படும் ஜே, டாடா ஏர்லைன்ஸை 1932-ல்தொடங்கி முன்னோடியாகத் திகழ்ந்தார். ஜே எனக்கு நல்ல நண்பராக, முன்னுதாரணமாக, வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.
இவ்வாறு ரத்தன் டாடா நினைவுகூர்ந்துள்ளார்.