

உள்நாட்டு நிறுவன நலன்களைக் காப்பாற்றும் விதமாக இந்திய தொழில்நுட்ப நிறுவன முன்னணி நிறுவனங்கள் பிரதமர் மோடியிடம், சீன நிறுவனங்களிடம் இன்னும் கடுமை காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
இன்றைய வளரும் இணையதள காலக்கட்டத்தில் உள்நாட்டு நிறுவனங்களை அமெரிக்க, சீன சர்வாதிபத்தியத்துக்கு விட்டுக் கொடுக்க அனுமதிக்கக் கூடாது என்று இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளன.
சமீபத்தில்தான் 57 சீன மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது, இதற்கு நாடு முழுதும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் பாலிசிபஜார் நிறுவனத்தின் இணை நிறுவனர் யாஷிஷ் தாஹியா இவரது நிறுவனத்திற்கு டென்செண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நிதியாதரவு அளிக்கிறது, மொபிக்விக் நிறுவனத்தின் பிபின் பிரீத் சிங் ஆகியோர் பிரதமர் மோடியை சீன நிறுவனங்களிடம் இன்னும் கடுமை காட்டுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
புளூம்பர்க் நியூஸிடம் தாஹியா கூறும்போது, “தன்னுடைய கேக்கை பிறருடன் பகிர மறுத்து பிறரது கேக்கை பறிக்கும் தன்முனைப்புக் குழந்தை சீனா. எனவே சீனா மேலும் நம் சந்தையில் தன் ஆதிக்கத்தைப் பரப்பும் முன் அதன் சிறகுகளை வெட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்தியா இதனை இப்போது செய்யவில்லை எனில் இனி எப்போதுமே செய்யாது. பாலிசிபஜார் நிறுவனம் இந்த ஆண்டு ஆன்லைன் காப்பீட்டுச் சேவையில் 2021-ல் ஐபிஓ மூலம் 3.5 பில்லியன் டாலர் தொகையை குறிவைத்துள்ளது.
இதே தாஹியா, சிங் இருவரது நிறுவனமும் சீன முதலீட்டாளர்களிடமிருந்து பல கோடிக்கணக்கான ரூபாய் முதலீடுகளைப் பெற்றுள்ளது, ஆனால் இப்போது தன் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ளது. சீனாவின் தவறான நடத்தையை யாராவது நிறுத்த வேண்டும் என்கிறார் தாஹியா.
சீனாவா அமெரிக்காவா என்ற வர்த்தகப் போரில் இந்தியாதான் பாதிக்கப்படும் என்கின்றனர் இந்த இரண்டு நிறுவன அதிபர்களும்.
இந்தியாவின் 130 கோடி மக்களுக்கும் அமெரிக்கா, சீன நிறுவனங்கள்தான் சேவை செய்ய வேண்டுமெனில் அது எப்படி நன்றாக இருக்கும்? என்று இந்த இரண்டு நிறுவனத் தலைவர்களும் கேள்வி எழுப்புகின்றனர். இந்தியாவில் டெக்னாலஜியில் ஜெயண்ட் நிறுவனம் ஏன் இல்லை, உலக நிறுவனங்களின் வளர்ச்சி எந்திரமாக இந்தியா உள்ளது, இது ஏன்? இந்தியா எதில் தவறு செய்கிறது?
சீனா மாதிரி மூடுண்ட ஒரு வர்த்தக அமைப்பை விரும்பவில்லை, மாறாக இந்திய நிறுவனங்களும் சம அளவில் போட்டியிடக்கூடிய சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதே என் கோரிக்கை என்கிறார் பிபின் பிரீத் சிங்.
-புளூம்பர்க்