‘அடுத்தடுத்து பல சீர்திருத்தங்கள் செய்யப்படும்’

‘அடுத்தடுத்து பல சீர்திருத்தங்கள் செய்யப்படும்’
Updated on
1 min read

முதலீடு செய்வதற்கு ஏற்ற இட மாக இந்தியாவை மாற்றுவதற்கு அடுத்தடுத்து பல சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரி வித்தார். சிங்கப்பூரில் 300க்கும் மேற்பட்ட சர்வதேச முதலீட்டாளர் கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்ற ஜேட்லி மேலும் கூறிய தாவது.

இந்தியாவில் நிச்சயமற்ற வரி முறைகள் இல்லை, கொள்கை முடக்கம் என எதுவும் இல்லை. முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சீர்த்திருத்தங்களை அடுத்தடுத்து செய்ய இருக்கிறோம். திவால் சட்டம் தயாராகிவிட்டது. அடுத்த சில ஆண்டுகளில் அனைத்து சீர்திருத்தங்களும் செய்யப்படும். கடந்த கூட்டத் தொடரில் சரக்கு மற்றும் சேவைவரி மசோதா (ஜிஎஸ்டி) நிறைவேற்றப்படாதது வருத்தம் அளிக்கிறது.

இந்தியாவின் மீது சர்வதேச முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. பொருளா தாரம் இதே வேகத்தில் வளர உங்களுடைய முதலீடு தேவைப் படுகிறது. என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in