

கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் நாட்டின் ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்களின் பங்களிப்பு 72% ஆகப் பின்னடைவு கண்டுள்ளது.
இதே கடந்த நிதியாண்டின் காலாண்டில் சீன நிறுவனங்களின் பங்களிப்பு 81 சதவீதமாக இருந்தது, தற்போது 72% ஆகப் பின்னடைவு கண்டுள்ளது.
கரோனா காரணமாக விநியோகம் பாதிக்கப்பட்டதாலும் சீனாவுக்கு எதிரான மக்களின் செண்டிமெண்டாலும் விற்பனைக் குறைந்துள்ளது.
விவோ, ஓப்போ, ரியல்மி நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.
ஜூனில் முடிந்த காலாண்டில் 1.80 கோடி ஸ்மார்ட்போன்களே விற்பனை ஆனது. இது கடந்த ஆண்டு காலாண்டை ஒப்பிட்டால் 51% சரிவாகும்.
சாம்சங் மற்றும் இந்திய செல்போன்களான மைக்ரோமேக்ஸ், லாவா ஆகியவற்றுக்கு தேவை அதிகரித்துள்ளது