

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்தவருமான ஸ்டீவ் பால்மர் இதுவரை உலக பணக்காரர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்தார். தற்போது அந்த இடத்துக்குரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை அம்பானியின் சொத்து மதிப்பு 1,880 கோடி டாலர் உயர்ந்துள்ளது.
புளூம்பெர்க் வெளியிடும் பணக்காரர்கள் பட்டியலில் ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 9 இடங்கள் முன்னேறியுள்ளார் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் ஃபேஸ்புக், சில்வர்லேக், பிரிட்டிஷ் பெட்ரோலியம் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் கணிசமாக முதலீடு செய்ததால் இவரது நிறுவன பங்குகளின் மதிப்பு 135 சதவீதம் உயர்ந்துள்ளது.