வெட்டுக்கிளிகளால் விவசாய பாதிப்பு: 10 மாநிலங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கை

வெட்டுக்கிளிகளால் விவசாய பாதிப்பு: 10 மாநிலங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கை

Published on

நாடுமுழுவதும் 10 மாநிலங்களில் 4 லட்சம் ஹெக்டருக்கும் அதிகமான பகுதியில் வெட்டுக்கிளிகளால் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய விவசாயத்துறை மேற்கொண்டுள்ளது.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், ஹரியானா மாநிலங்களில், 2020 ஏப்ரல் 11 முதல் 2020 ஜூலை 23 வரையிலான காலத்தில் 2,02,565 ஹெக்டர் பரப்பில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை, வெட்டுக்கிளிக் கட்டுப்படுத்தல் வட்டார அலுவலகங்கள் மேற்கொண்டுள்ளன. 2020 ஜூலை 23ஆம் தேதி வரையில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் பிகார் மாநில அரசுகள் மூலம் 1,98,65 ஹெக்டர் பரப்பில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பிகார் மற்றும் ஹரியானா மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் பயிர்கள் இழப்பு குறித்து எந்தத் தகவலும் பதிவாகவில்லை. இருந்தபோதிலும் ராஜஸ்தானில் சில மாவட்டங்களில் குறைந்த அளவில் பயிர்கள் நாசமானதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இன்றைக்கு (24.07.2020) வளர்ச்சி அடையாத இளஞ்சிவப்பு நிற வெட்டுக் கிளிகள் மற்றும் வளர்ந்த மஞ்சள் வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானில் பார்மர், ஜோத்பூர், பிக்கானிர், சூரு, நாகாவுர், ஸ்ரீகங்காநகர் மற்றும் பரத்பூர் மாவட்டங்களில் அதிகமாகக் காணப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in