

குறுவை சாகுபடியை பொறுத்தவரையில் நெல், பருப்பு வகைகள், புஞ்சைத் தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் விதைப்பு கடந்த ஆண்டை விட அதிகமாக உயர்ந்துள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது விவசாயிகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளை கள அளவில் எளிதாக்க இந்திய அரசின் வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் விவசாய நலத்துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறுவைப்பயிர்கள் விதைப்பின் நிலப்பரப்பை பொறுத்தவரை திருப்திகரமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இதன் நிலை கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.
குறுவைப் பயிர்கள் விதைத்தப் பரப்பளவு அரிசி: சுமார் 220.24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் அரிசி பயிரிடப்பட்டுள்ளது. ஒப்பிடும் போது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில். 187.70 லட்சம் ஹெக்டேர் மட்டுமே பயிரிடப்பட்டது..
பருப்பு வகைகள்: சுமார் 99.71 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டுள்ளது. ஒப்பிடும் போது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 79.30 லட்சம் ஹெக்டேர் மட்டுமே பயிரிடப்பட்டது.
புஞ்சை தானியங்கள்: சுமார் 137.13 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் புஞ்சை தானியங்கள் பயிரிடப்பட்டுள்ளது. ஒப்பிடும் போது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில்.120.30 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே பயிரிடப்பட்டது..
எண்ணெய் வித்துக்கள்: சுமார் 166.36 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய் வித்துகள் பயிரிடப்பட்டுள்ளது. ஒப்பிடும் போது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 133.56 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே பயிரிடப்பட்டது. .
கரும்பு: சுமார் 51.54 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. ஒப்பிடும் போது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 51.02 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே பயிரிடப்பட்டது.
சணல் மற்றும் புளிச்ச கீரை (MESTA): சுமார் 6.94 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சணல் மற்றும் புளிச்ச கீரை பயிரிடப்பட்டுள்ளது. ஒப்பிடும்
போது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 6.84 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே பயிரிடப்பட்டது.
பருத்தி: சுமார் 118.03 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. ஒப்பிடும் போது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில். 96.35 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே பயிரிடப்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 123 நீர்த்தேக்கங்களில் நேரடி நீர் சேமிப்பு கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 155 சதவீதம் அதிகம் என்று மத்திய நீர் ஆணையம் (CWC) தெரிவித்துள்ளது
ராபி மார்க்கெட்டிங் சீசன் (RMS) 2020-21 இல், மொத்தம் 420.90 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை இந்திய உணவுக் கழகத்திற்கு (FCI) வந்துள்ளது, அதில் 389.75 லட்சம் மெட்ரிக் டன் வாங்கப்பட்டுள்ளது.