பஜாஜ் பைனான்ஸ் தலைவர் ராகுல் பதவி விலக முடிவு

பஜாஜ் பைனான்ஸ் தலைவர் ராகுல் பதவி விலக முடிவு
Updated on
1 min read

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் இம்மாதம் 31-ம் தேதி விலகுகிறார். ஏறக்குறைய 33 ஆண்டுகளாக இப்பொறுப்பை அவர் வகித்து வந்துள்ளார்.

தற்போது நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ள சஞ்ஜீவ் பஜாஜ், புதிய தலை வராக ஆகஸ்ட் 1-ம் தேதி பொறுப்பேற்பார் என்று பங்குச் சந்தைக்கு நிறுவனம் அனுப் பிய கடிதத்தில் தெரிவித்துள் ளது.

கடந்த 1987-ம் ஆண்டு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ராகுல் பஜாஜ் வகித்து வந்தார். அடுத்த தலை முறையினர் பொறுப்பேற்கும் விதமாக தலைவர் பொறுப்பில் இருந்து ஜூலை 31-ம் தேதி அவர் விலகுவதாக இயக்குநர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டுள்ளது.

எனினும், நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகள் எதிலும் ஈடுபடாத செயல் இயக்குநராக ராகுல் பஜாஜ் தொடர்வார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in