

கரோனா பெருந்தொற்றை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 1,49,160 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 5,274.40 கோடி வழங்குவது என கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான தேசிய இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
கரோனா பெருந்தொற்றினைத் தொடர்ந்த ஊரடங்கு விலக்கின் இரண்டாவது கட்டம் என்பது வேலையை இழந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள தொழிலாளர்களுக்கு புதிய வழிகளை உருவாக்குவதற்கான காலமும் ஆகும்.
இத்தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட குடிமைப் பொருள்களை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆஜீவிகா என்ற பெயரில் மத்திய ஊரக வளர்ச்சிக்கான அமைச்சகம் 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான தேசிய இயக்கம் கிராமப்புற ஏழைகளுக்கு உதவி செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இதற்கான முதலீட்டில் ஒரு பகுதி உலக வங்கியின் ஆதரவுடன் பெறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். நீடித்த வாழ்வாதார மேம்பாடுகளின் மூலமும், நிதிசார் சேவைகளை அணுகுவதை மேம்படுத்துவதன் மூலமும் அவர்கள் தங்களது குடும்ப வருமானத்தை அதிகரித்துக் கொள்ள இத்திட்டம் உதவுகிறது. சுயமாகவே தங்களை நிர்வகித்துக் கொள்ளும் சுய உதவிக் குழுக்களின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 6 லட்சம் கிராமங்களில் 7 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இந்த வசதியை வழங்குவதென கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான தேசிய இயக்கம் திட்டமிட்டிருந்தது.
2020-21 நிதியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 1,49,160 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 5,274.40 கோடி வழங்குவது என கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான தேசிய இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான தேசிய இயக்கத்தின் அடிப்படையில் ஊரக மாற்றத்திற்கான திட்டத்தை தமிழ்நாடு அமல்படுத்தி வருகிறது.