Published : 21 Jul 2020 07:23 AM
Last Updated : 21 Jul 2020 07:23 AM

நோட்டீஸ் வந்தால் நேரில் வரவேண்டாம்: வரித்துறை தகவல்

வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் பெரும்பாலானோர் பதற்றமாகி விடுகின்றனர். அப்படி நோட்டீஸ் வந்தால் பதற்றம் அடைய தேவையில்லை. அதேபோல் உடனே அருகில் உள்ள வருமான வரித் துறைஅதிகாரிகளை நேரில் சந்தித்துவிளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. இணையதளம் மூலம் உங்களுடைய நோட்டீஸுக்கான விளக்கத்தை வழங்கலாம் என வருமான வரித் துறை கூறியுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தியபடி இணையதளம் மூலமாக வருமான வரிக் கணக்கை மதிப்பீடு செய்யும் நடைமுறை கடந்த அக்டோபரில் அமல்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையின் மூலம் வருமான வரிக் கணக்குதொடர்பாக இதுவரை 58,319 வழக்குகளை விசாரிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் இதுவரை 7,116 வழக்குகள் இணையதளம் மூலமாகவே தீர்வு காணப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x