அமெரிக்காவில் கச்சா எண்ணெய் சேமித்து வைப்பு: இந்தியா ஒப்பந்தம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
Updated on
1 min read

பெட்ரோலிய வளம் சார்ந்த செயல் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்திய-அமெரிக்க எரிசக்திக் கூட்டுறவு திட்டம் குறித்த வீடியோ கான்பரன்சிங் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் டான் ப்ரூலெட் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஒப்பந்தம் குறித்து தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பெட்ரோலிய வளம் தொடர்பான திட்டங்களை சேர்ந்து மேற்கொள்ளலாம் என்று அமெரிக்கா அழைப்பு விடுத்தது.

இதனையடுத்து இருநாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவில் கச்சா எண்ணெயை தேக்கி வைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இதன் மூலம் இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்பை அதிகரிக்க முடியும்” என்றார்.

அமெரிக்க எரிசக்தி அமைச்சர் டாம் ப்ரூலெட் கூறும்போது, பெட்ரோலிய வளம் தொடர்பான இரு நாடுகளின் கூட்டுறவுத் திட்டத்தில் முதலில் கச்சா எண்ணெய் தொடர்பான பேச்சு நடைபெறுகிறது. இத்திட்டம் பரஸ்பரம் இருநாடுகளுக்கும் பயன் உள்ளதாக இருக்கும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in