இண்டிகோ விமானத்தில் சமூக இடைவெளியுடன் பயணிக்க 24-ம் தேதி முதல் கட்டண சலுகை

இண்டிகோ விமானத்தில் சமூக இடைவெளியுடன் பயணிக்க 24-ம் தேதி முதல் கட்டண சலுகை
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க விமானத்தில் பயணிப்பவர்கள் தங்களுடைய பக்கத்து இருக்கையை காலியாக விட விரும்பும் நிலையில், ஒரே நபர் 2 இருக்கைகளைப் பதிவு செய்யும் வசதியை ஜூலை 24-ம் தேதி முதல் செயல்படுத்த உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது இதில் பயணிக்க விரும்பும் நபர், முதல் இருக்கையை முழு கட்டணத்திலும் காலி இருக்கையை 25 சதவீத தள்ளுபடியிலும் பெற்றுக் கொள்ளலாம். இரண்டு இருக்கை பதிவு வசதியில் ஏர்லைன்ஸ் காம்பொனன்ட் மற்றும் ஜிஎஸ்டி மட்டுமே கணக்கிடப்படும். இந்த இரண்டு இருக்கை வசதியைப் பெற இண்டிகோ இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். இருக்கை மாற்றம் மற்றும் ரத்துக்கான கட்டணமும் வழக்கம் போல் இருக்கும். ஆனால் கூடுதல் இருக்கைக்கான பேக்கேஜ்கான கட்டணம் இருக்காது என்றும் கூறியுள்ளது.

இதேபோன்ற இரண்டு இருக்கை பதிவு செய்யும் வசதியை ஏற்கெனவே விஸ்தாரா மற்றும் கோ ஏர் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in