முடிவின்றி மன்னிப்பு கோருகிறேன்: ஃபோக்ஸ்வேகன் புகை அளவு மோசடியில் சிஇஓ கருத்து

முடிவின்றி மன்னிப்பு கோருகிறேன்: ஃபோக்ஸ்வேகன் புகை அளவு மோசடியில் சிஇஓ கருத்து
Updated on
2 min read

ஃபோக்ஸ்வேகன் டீசல் கார்களில் புகை அளவு சாஃப்ட்வேரில் செய்த மோசடிக்காக முடிவின்றி மன்னிப் புக் கோருவதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மார்டின் வின்டர்கோர்ன் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் லட்சக் கணக்கான மக்கள் எங்கள் பிராண்டு மீது நம்பிக்கை வைத் துள்ளனர். எங்களது தொழில் நுட்பத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை அவர்க ளுக்கு உண்டு. இப்போது நிகழ்ந்த தவறுக்கு எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் போதாது, முடிவின்றி மன்னிப்பு கோருகிறேன் என்று வீடியோ மூலம் வெளி யிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். தவறு நிகழ்ந்துவிட்டது, அதற்காக எங்கள் மீதான நம்பிக்கையை உதறிவிடாதீர்கள். உங்களது நம்பிக்கைதான் எங்களை முன்னெடுத்துச் செல்லும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தனது தலைமையில் இத்தகைய தவறு நிகழ்ந்ததற்கு மன்னிப்பு கோரிய அவர் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். இருந்தாலும் அவர் பதவி விலகுவதற்கான அறிகுறிகள் ஏதும் தற்போதைக்கு தென்படவில்லை. வின்டர்கோர்ன் 2007-ம் ஆண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி யாக பொறுப்பேற்றார். ஃபோக்ஸ் வேகன் நிறுவன கார்களில் இத்தகைய சாப்ட்வேர் 2009-ம் ஆண்டில் பொறுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த சாப்ட்வேரை நிறுவியது யார், எவரது வழிகாட்டு தலின்படி இது நிறுவப்பட்டது என்ற கேள்விக்கு இதுவரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பதிலலிக்கவில்லை.

ஃபோக்ஸ்வேகன் கார்களில் செய்யப்பட்ட மோசடியின் தாக்கம் செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் எதிரொலித்தது. இத னால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2,400 கோடி யூரோக்கள் வரை சரிந்தது. நிறுவன பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்து ஒரு பங்கு 111.20 யூரோ என்ற விலையில் வர்த்தகமானது.

ஏறக்குறைய 1.10 கோடி டீசல் கார்களில் இத்தகைய சாப்ட்வேர் மோசடி செய்யப்பட்டிருப்பதை நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதில் 4.82 லட்சம் கார்களை அமெரிக்க சூழல் பாதுகாப்பு முகமை அடையாளம் கண்டுள் ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க 650 கோடி யூரோக்களை இந்நிறுவனம் செலவிட திட்ட மிட்டுள்ளது. இதன் மூலம் இழந்த பெருமையை மீட்க திட்ட மிட்டுள்ளது.

ஒரு காருக்கு 37,500 டாலர் அபராதம் விதிக்கப்படலாம் என மதிப்பிடடப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபருக்கு ஒரு காருக்கு 3,750 டாலர் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிகிறது. அமெரிக்க சுற்றுச்சூழல் முகமை விதிக்கும் அபராதத்தைக் கணக் கிட்டால் குறைந்தபட்சம் 1,800 கோடி டாலரை இந்நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிகிறது.

ஃபோக்ஸ்வேகன் கார்களில் பொறுத்தப்பட்ட சாப்ட்வேர் கருவி யானது அதிகாரபூர்வ சோதனை யின்போது மட்டும் நிர்ணயிக்கப்பட்ட அளவு புகை மாசை வெளியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி வழக்கமாக ஓடும்போது அது நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 40 மடங்கு கூடுதலான புகை மாசை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரம் காரணமாக ஜெர்மனியின் பிற கார் தயாரிப்பு நிறுவனங்களான டெய்ம்லர் ஏஜி, பிஎம்டபிள்யூ நிறுவன பங்குகள் 6 சதவீதம் வரை சரிந்தன. பிரான்சின் ரெனால்ட் நிறுவன பங்கு 7.1 சதவீதம் வீழ்ந்தது.

ஜெர்மனியின் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தர விட்டுள்ளார். ஃபோக்ஸ்வேகன் டீசல் கார்கள் ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய யூனியன் புகை வெளியிடும் அளவு தரத்தை மீறியுள்ளதா என ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். பிரான்ஸ் அரசும், தென் கொரிய அரசும் இது குறித்து ஏற்கெனவே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in