

அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் உச்சத்தைஎட்டியுள்ளது. இதன் விளைவாக சீனாவின் பிரபலமான ஹூவாய் (Huawei) நிறுவனத்தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது.தற்போது, இந்நிறுவனத்துக்குபிரிட்டனிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனா -பிரிட்டன் இடையிலான உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.. பிரிட்டனில் ஹூவாய் தொலைத்தொடர்பு நிறுவனத் தயாரிப்புகள் 20 ஆண்டுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ளது.
ஹூவாய் நிறுவனத்துக்கு தடை விதிப்பது தொடர்பானஅறிவிப்பை நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் துறை அமைச்சர்ஆலிவர் டவுடன் அறிவித்தார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது அமைச்சரவை சகாக்களுடனும் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலுடனும் ஆலோசனை நடத்திய பிறகு இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.