Last Updated : 22 Sep, 2015 10:06 AM

 

Published : 22 Sep 2015 10:06 AM
Last Updated : 22 Sep 2015 10:06 AM

தேசிய பங்குச் சந்தைக்கு ரூ.50 லட்சம் அபராதம்: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

அவதூறு வழக்கில் ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இரு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஆன்லைன் செய்தி இணைய தளம் மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் தேசிய பங்குச் சந்தைக்கு ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தேசிய பங்குச் சந்தை இணையதள நிறுவனம் மீது தவறான வழிமுறைகளை வெளி யிட்டதாக்க கூறி அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஒரு நபர் நீதிபதி இந்த வழக்குக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி தேசிய பங்குச் சந்தைக்கு ரூ. 50 லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

இது குறித்து மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தது. அதில் ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது குறித்து ஆய்வு செய்யு மாறு கோரியிருந்தது.

இதை விசாரித்த நீதிபதி வி.எம். கனடே, ரூ. 50 லட்சம் அபராதம் செலுத்த இரு வாரத்துக்கு தடை விதித்தார்.அத்துடன் இது தொடர்பாக விவரமான பதில் மனு தாக்கல் செய்யுமாறு இணையதள செய்தி நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தீர்ப்புவழங்கப்பட்டது. அதில் இந்த இணையதள நிறுவனத்தை நடத்தும் இருவருக்கு தலா ரூ.1.5 லட்சம் நஷ்ட ஈடும், ரூ.47 லட்சத்தை டாடா நினைவு மருத்துவமனை மற்றும் மசினா மருத்துவமனைக்கு நன்கொடை யாக அளிக்குமாறு உத்தர விட்டார்.

என்எஸ்இ தொடர்ந்த வழக்கில் இணையதளத்தில் வெளியிட்ட செய்தி பங்குச் சந்தையை களங்கப்படுத்தும் வகையில் இருந்ததாகவும் அந்த செய்தியைத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தது. ஆனால் வழக்கை விசாரித்த போது, இணையதளத்தில் செய்தியை வெளியிடும் முன்பாக பங்குச் சந்தையிடம் சில கேள்விகளை அந்நிறுவனம் கேட்டுள்ளது. ஆனால் அந்த கேள்விகளுக்கு பங்குச் சந்தை பதில் அளிக்கவில்லை என்ற விவரம் புலனானது. செய்தி இணையதளம் கேட்டிருந்த கேள்விகளுக்கு பங்குச் சந்தை பதில் அளிக்காத நிலையில் இதில் அவதூறு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று நீதிபதி கூறினார்.

அந்த செய்தியில் அவதூறு ஏதுமில்லை என்று தெரிந்த போதிலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகை யில் பங்குச் சந்தை செயல் பட்டுள்ளதைக் கண்டித்து நீதிபதி ரூ.50 லட்சம் அபராதம் விதித்தார். இதில் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சமும், எஞ்சிய ரூ.47 லட்சத் தை 2 மருத்துவமனைகளுக்கும் அளிக்க உத்தரவிட்டார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x