Published : 13 Jul 2020 04:19 PM
Last Updated : 13 Jul 2020 04:19 PM

நெருக்கடியையே வாய்ப்பாக மாற்றி எதிர்பாற்றலுடன் காலூன்றி நிற்கும் வர்த்தக துறையினர்: பியூஷ் கோயல் பாராட்டு

வலிமையான, எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்ட மற்றும் சுயசார்பு இந்தியாவுக்காக வர்த்தக அமைப்புகள் முக்கிய பங்கினை ஆற்ற முடியும்: பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

மும்பாய் வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் 184வது பொதுக்குழு கூட்டத்தில் காணொலி மூலம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார். அப்போது, கோவிட்-19 நெருக்கடி, உலகையை மாற்றியுள்ளபோதிலும் இந்திய மக்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் இந்த நெருக்கடிக்கு பலியாகி விடாமல் இந்தச் சூழலை எதிர்கொள்ள தொடர்ச்சியாக புதிது புதிதான வழிமுறைகளை உருவாக்கி நெருக்கடியையே வாய்ப்பாக மாற்றி எதிர்பாற்றல் என்ற பிரத்யேக குணாம்சத்துடன் காலூன்றி நிற்கின்றனர் என்று மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று புதுதில்லியில் தெரிவித்தார்.

கோயல் காணொலிக் காட்சி மூலமாக நாட்டின் மிகப்பழமையான வர்த்தக சபைகளில் ஒன்றான மும்பை வர்த்தக மற்றும் தொழில் சபையின் 184வது பொதுக்குழு கூட்டத்தில் அதன் அலுவலக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடையே சிறப்புரை ஆற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டார்.

கோயல் இந்தியாவை சுயசார்புள்ள நாடாக மாற்றுவதற்கு முன்வந்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் பங்கை அங்கீகரித்துப் பாராட்டினார். மேலும் இவை பிபிஇ உற்பத்தி, ஐசியூ படுக்கைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல், தனிமைப்படுத்தல் வசதிகள், முகக்கவசங்கள் தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு இந்தியாவில் கோவிட் நெருக்கடி சூழலை எதிர்த்துப் போராடி வருகின்றன என்றார்.

மேலும் இந்தியா தற்போது பிபிஇ-க்களை ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிற்கு, இவை செயலாற்றி உள்ளன எனவும், கட்டுப்பாட்டுத் தளர்வு தொடங்கியதன் காரணமாக இந்தியப் பொருளாதாரம் முன்னேறி வருகிறது என்பதை சரக்குகள் போக்குவரத்து, மின்சார நுகர்வு அதிகரிப்பு போன்றவை சுட்டிக்காட்டுகின்றன எனவும் கூறினார்.

‘‘குறிப்பிடத்தக்க அளவு இயக்குதலுடன் உற்பத்தித்துறை செயல்படத் தொடங்கி உள்ளது. ஏற்றுமதிகள் முன்னேற்றப்போக்கை காட்டுகின்றன. கோவிட் நெருக்கடிக்கு முன்புள்ள உலகமும், கோவிட் நெருக்கடிக்கு பின்புள்ள உலகமும் வித்தியாசமானவையாக இருக்கின்றன. கோவிட்

நெருக்கடிக்கு பின்பான உலகை சிறப்பானதாக மாற்றிக் கொள்ள நாம் முயற்சிகள் எடுத்து வருகிறோம்’’ என்று அமைச்சர் தெரிவித்தார். ஒரு நாடாக இந்தியாவானது நெருக்கடிக்குப் பிறகான காலகட்டத்தில் முதலீடு, உள்கட்டமைப்பு வசதி மற்றும் புத்தாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோயல் குறிப்பிட்டார். உற்பத்தியை அதிகரித்தல், உற்பத்திப் பொருட்களின் தரத்தை அதிகரித்தல், அதிக அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கு முயற்சி செய்தல், இடையூறு இல்லாத சரக்குப் பயணத்திற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுதல், போட்டியை எதிர்கொள்ளக் கூடிய வகையில் விலை, புத்தாக்க நடைமுறைகளை பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்தக் கவனம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

அரசும், வர்த்தக அமைப்புகளும் ஒன்றாக இணைந்து வளர்ச்சிக்கு உந்துதல் அளித்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், இளைஞர்களுக்கு வேலை அளித்தல், வலிமையுடன் உலகை எதிர்கொள்ளுதல், உலகிற்கான வாசலை மூடுவதாக இல்லாமல் ”ஆத்ம நிர்பார் பாரத்” என்ற தற்சார்புடன் இருத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும் எனக் கூறினார்.

வலிமையான மற்றும் எதிர்த்து நிற்கும் ஆற்றலுடன் கூடிய இந்தியாவை உருவாக்குவதில் வர்த்தக அமைப்புகள் முக்கிய பங்கினை ஆற்ற முடியும் என்று கோயல் குறிப்பிட்டார். நாட்டின் மிகப் பழமையான வர்த்தக அமைப்புகளில் ஒன்றான பம்பாய் வர்த்தகம் மற்றும் தொழில்கள் சபையின் 184வது பொதுக்குழு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார். தனது இளைஞர்களின் ஆற்றல்களை பயன்படுத்தியும் இன்றைய சோதனையான காலகட்டத்தில் 130 கோடி இந்தியர்களின் எதிர்ப்பாற்றலையும் பயன்படுத்தி இந்தியா உலகில் முன்னணி நாடாக விளங்க முடியும் என்ற தன்னுடைய நம்பிக்கையையும் கோயல் தனது உரையின் முடிவில் வெளிப்படுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x