கோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு

கோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு
Updated on
1 min read

கோவிட்-19 பொதுமுடக்கத்தால் வாழ்வாதார சிக்கல்களை சமாளிக்க சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கோவிட் சிறப்புக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கலை சுய உதவிக் குழுக்கள் சமாளிக்க உதவும் வகையில், மத்திய அரசு அறிவித்த தற்சார்பு இந்தியா உதவித் தொகுப்பின் கீழ் பிணை இல்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன.

பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு இன்னும் வேலை எதுவும் இல்லாததால், பொதுமுடக்கத் தளர்வுகள்-2 காலத்தின் போது கடன் தொகை அவர்களுக்கு உதவும். பிரதமரின் ஏழைகள் உணவு மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்புகள் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட இலவச ரேஷன் பொருள்கள், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் மகளிர் ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 500 நிதி உதவி என அரசு வழங்கி வருகிறது.

கோவிட்-19 கடன் திட்டத்தின் கீழ், ஒரு சுய உதவிக் குழுவுக்கு அதிகபட்சம் ரூ ஒரு லட்சம் என, ரூ 5,000 வரை சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்குக் கடன் வழங்கப்படுகிறது.

கோவிட்-19 பொதுமுடக்கத்தை தொடர்ந்து
தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு ரூ 62.5 லட்சம் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in