மே மாதத்துக்கான தொழில்துறை உற்பத்திக்குறியீடு 88.4%

மே மாதத்துக்கான தொழில்துறை உற்பத்திக்குறியீடு 88.4%
Updated on
1 min read

2020 மே மாதத்துக்கான தொழில்துறை உற்பத்திக்குறியீடு 88.4 ஆக உள்ளது.

தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் துரித மதிப்பீடுகள் மற்றும் 2020மே மாதத்துக்கான பயன்-அடிப்படைக் குறியீடு ( அடிப்படை 2011-12=100)

தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் (ஐஐபி) துரித மதிப்பீடுகள் ஒவ்வொரு மாதமும் 12-ஆம் தேதி ( அல்லது முந்தைய வேலை நாளில்) ஆறு வார இடைவெளியில் வெளியிடப்பட்டு வருகிறது.
உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் தரவுகளை ஆதார முகமைகள் பெற்று அவற்றைத் தொகுக்கின்றன.

கோவிட்-19 பெருந்தொற்று பரவி வருவதைக் கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலான தொழில்துறை நிறுவனங்கள் 2020 மார்ச் மாத இறுதி வாரத்திலிருந்து இயங்கவில்லை.

2020 மே மாதத்துக்கான தொழில்துறை உற்பத்திக்குறியீடு 88.4 ஆக இருந்தது. இந்த குறியீடு 2020 ஏப்ரல் மாதத்தில் 53.6ஆக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in