

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 110 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டார் சிட்டி பிளஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளின் விற்பனையக விலை ரூ. 44 ஆயிரமாகும்.
இந்நிறுவனம் ஏற்கெனவே அறிமுகப் படுத்தியுள்ள ஸ்டார் சிட்டி மோட்டார் சைக்கிளின் மேம்படுத்தப்பட்ட ரகமாக இது விற்பனைக்கு வந்துள்ளது. ஏற்கெனவே தங்கள் நிறுவனம் ஃபீனிக்ஸ் மற்றும் ஜூபிடர் என்ற பெயரில் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்போது ஸ்டார் சிட்டி பிளஸ் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக நிறுவனத் தின் தலைவர் வேணு சீனிவாசன் தெரிவித்தார். நான்கு மாதங்களில் 2 மோட்டார் சைக்கிள்களை அறிமுகப் படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புதிய மோட்டார் சைக்கிள் சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 86 கி.மீ. தூரம் ஓடியதாக அவர் கூறினார்.