Published : 07 Jul 2020 07:59 PM
Last Updated : 07 Jul 2020 07:59 PM

கங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கை திட்டம்: உலக வங்கி 400 மில்லியன் டாலர்கள் கடனுதவி

புதுடெல்லி

கங்கையை சுத்தம் செய்வதற்காக உலகவங்கி 400 மில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்குகிறது.

கங்கை நதியைப் புதுப்பிப்பதற்கு முற்படும் ”நமாமி கங்கே” திட்டத்திற்காக உலக வங்கியும், இந்திய அரசும் கடன் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. இரண்டாவது தேசிய சின்னமான கங்கை நதி மாசுபடுவதைத் தடுக்கவும், 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நதிப்படுகையின் நிர்வாகத்தை வலுப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும்.

400 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் 381 மில்லியன் கடன் மற்றும் 19 மில்லியன் டாலர் வரை முன்மொழியப்பட்ட உத்தரவாதம் ஆகியவை அடங்கும்.

"அரசாங்கத்தின் நமாமி கங்கே திட்டம் கங்கையைப் புதுபிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்குப் புத்துயிர் அளித்துள்ளது" என்று இந்தியாவில் உலக வங்கி இயக்குநர் ஜுனைத் அகமது கூறினார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அடர்த்தியான கங்கை நதிப் படுகையில் உருவாக்கப்படுகிறது. ஆனால் கங்கை நதி இன்று மனிதர்களின் பொருளாதார நடவடிக்கைகளின் காரணமாக அழுத்தங்களை எதிர் கொள்கிறது. அது அதன் தரத்தையும், நீரோட்டங்களையும் பாதிக்கிறது.

கங்கையில் மாசுபாட்டின் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை நதி மற்றும் அதன் துணை நதிகளில் அருகில் உள்ள நகரங்கள் மற்றும் மாநகரங்களிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீரிலிருந்து வருகின்றன.

400 மில்லியன் டாலர் செயல்பாட்டில் கங்காவின் துணை நதிகளில் மூன்று கலப்பின-வருடாந்திர மாதிரி பொது - தனியார் கூட்டாண்மை (HAM-PPP) முதலீடுகளுக்கான அரசாங்கத்தின் கட்டணக் பொறுப்புகளைத் தடுக்க 19 மில்லியன் டாலர் வரை முன்மொழியப்பட்ட உத்தரவாதம் அடங்கும்.

381 மில்லியன் டாலர் கடன் தொகை ஐந்து ஆண்டுகள் சலுகைக் காலம் உட்பட 18.5 ஆண்டுகள் முதிர்ச்சியைக் கொண்டுள்ளது. 19 மில்லியன் டாலர் கடன் உத்தரவாதத்தின் காலாவதி தேதி உத்தரவாத செயல்திறன் தேதியிலிருந்து 18 ஆண்டுகள் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x