

கரோனா ஊரடங்கு காரணமாக ஜூம் அப், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், சிஸ்கோ வெபெக்ஸ், கூகுள் மீட் போன்ற செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இவற்றுக்குப் போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரத்யேக செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. ஜியோ மீட் என்று பெயரிடப்பட்டுள்ள இச்செயலி மூலம் சந்திப்பை நிகழ்த்துபவர் ஒரே நேரத்தில் 100 பேர் கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் மற்ற செயலிகள் அதிக அளவிலான நபர்களை ஒருங்கிணைக்க கட்டணம் வசூலிக்கும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ
வின் ஜியோ மீட் செயலி எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. தற்போது இலவசமாகவே இந்த செயலி இயங்குகிறது. மேலும், சந்திப்பின் கால அளவு தொடர்பாகவும் எந்த வரம்பும் ஜியோ மீட் செயலியில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஜியோ மீட் செயலி இதுவரை ரிலையன்ஸ் ஜியோ ஊழியர்களால் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் தற்போது இது பொதுப் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட் டுள்ளது.