Published : 04 Jul 2020 04:07 PM
Last Updated : 04 Jul 2020 04:07 PM

தங்கக் கடன் பத்திரத் திட்டம்; வெளியீட்டு விலை எவ்வளவு?

புதுடெல்லி

மத்திய அரசு தங்கக் கடன் பத்திரத் திட்டத்தை அறிவித்த நிலையில் அதற்கான வெளியீட்டு விலையை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவிக்கை எண் No. F.No.4(4)-B/(W&M)/2020 13 ஏப்ரல் 2020 தங்கக் கடன் பத்திரங்கள் 2021 வரிசை IV) ஜூலை மாதம் 6 முதல் 10 தேதி வரை திறந்திருக்கும். இதற்கான செட்டில்மென்ட் தேதி 14 ஜூலை 2020. இந்திய ரிசர்வ் வங்கி 3 ஜூலை 2020 அன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, இந்தப் பத்திரத்தின் வெளியீட்டு விலை சந்தா காலத்தில் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4852 ( நாலாயிரத்து ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்தியிரண்டு மட்டும்) ஆகும்

மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியைக் கலந்தாலோசித்த பிறகு இந்த திட்டத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து மின்னணு முறை மூலமாக பணம் செலுத்துபவர்களுக்கு 50 ரூபாய் (ஐம்பது ரூபாய் மட்டும்) தள்ளுபடி அளிக்க முடிவு செய்துள்ளது.

இதுபோன்ற முதலீட்டாளர்களுக்கு வெளியீட்டு விலை கிராம் ஒன்றுக்கு 4802 ரூபாய் நாலாயிரத்து எண்ணூற்றியிரண்டு ரூபாயாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x