Published : 02 Jul 2020 07:22 PM
Last Updated : 02 Jul 2020 07:22 PM

நெடுஞ்சாலைத்துறையில் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை; கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை அமைப்பு

நெடுஞ்சாலைத்துறையில் முதலீட்டை அதிகரிக்க வகை செய்யும் நோக்கத்துடன் கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை InvIT ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கையை இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை கழகம் ஈடுபட்டு வருகிறது.

இந்த முதலீட்டு நிதியத்தின் முதலீட்டு மேலாளராக செயல்படுவதற்காக புதிய நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அரசாங்க அல்லது அரசு சார் அமைப்பின் ஆதரவுடன் இயங்கக்கூடிய முதலாவது கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளையாக InvIT இது விளங்கும்.

எனவே தொழில் ரீதியாக முதலீட்டு மேலாளர் பணியை மேற்கொள்ளும் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்துவது மிக முக்கியமானதாகும்.

இந்த முதலீட்டு மேலாளர் வாரியத்திற்கான தலைவரையும், இரண்டு தனிப்பட்ட இயக்குநர்களையும் தேர்ந்தெடுத்து நியமிப்பதற்காக ஆய்வு மற்றும் தேர்வுக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் தலைவர் சுக் பீர் சிங் சிந்து, இந்தக் குழுவின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தலைவர் தீபக் பரேக்; ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் கிரிஷ் சந்திர சதுர்வேதி; மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலர் சஞ்சய் மித்ரா ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x