

அரசு கட்டிடங்களின் மேற்கூரை களில் சோலார் பேனல்கள் அமைத்து சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அனைத்து அமைச்சகங்கள், மாநிலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் 2022-ம் ஆண்டுக்குள் 40,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு கட்டிடங்களில் மேற்கூரை எதற்கும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. தற்போது இருக்கும் இடங்களில் பாதி அளவுக்கு பயன்படுத்தினால் கூட ஆயிரக் கணக்கான மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். 10 சதுர மீட்டர் இடத்தை பயன்படுத்தி கூட மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
சூரிய மின்சாரத்தை பயன் படுத்துவதன் மூலம் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் தவிர, கரியமில வாயு வெளி யேறுவதையும் தடுக்க முடியும்.
சூரிய மின்சாரத்துக்கு அரசாங்கம் நிதி உதவி செய்கிறது. பொருத்தும் கட்டணத்தில் 15% வரை தள்ளுபடி கொடுக்கப் படுகிறது. வீடுகள், நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சமூக மேம்பாட்டு நிறுவனங்கள் என 4 பிரிவுகளுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.