

இலங்கை மத்திய வங்கிக்கு (சிபிஎஸ்எல்) இந்திய ரிசர்வ் வங்கி 110 கோடி டாலர் தொகையை சிறப்பு கரன்சி பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில் அளித்துள்ளது.
இந்த பரிமாற்றம் மூலம் அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்ந்திருக்கிறது. இத்தகைய பரிவர்த்தனை மூலம் பெறப்படும் தொகை நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் பிற வர்த்தகப் பரிவர்த்தனைக்கு உதவும் என்று சிபிஎஸ்எல் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் 40 கோடி டாலர் வழங்கப்பட்டது. இதுபோல நிதி பரிவர்த்தனைக்கான ஒப்பந்தம் இலங்கை மத்திய வங்கிக்கும் இந்திய ரிசர்வ் வங்கிக்கும் இடையே கையெழுத்தானது.