

மே மாதத்தில் தொழிற்சாலை உற்பத்திக் குறியீட்டு எண்ணில் (IIP) உள்ளடக்கப்பட்ட தொழில்களில் எட்டு அடிப்படைத் தொழில்களும் 40.27 சதவிகிதப் பங்கு வகிக்கின்றன.
தொழில் மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கான துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் மே 2020க்கான எட்டு அடிப்படைத் தொழில்களின் குறியீட்டு எண்ணை அறிவித்துள்ளது.
எட்டு அடிப்படைத் தொழில்களின் குறியீட்டு எண்ணின் வளர்ச்சி விகிதம் ஏப்ரல் 2020இல் 37 சதவீதம் (தற்காலிகம்) குறைப்பு என்பதோடு ஒப்பிட மே 2020இல் 23.4சதவீதம் (தற்காலிகம்) குறைந்துள்ளது. 2020-21 ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்தில் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சி -30.0 சதவீதமாக இருந்தது
கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலின் காரணமாக ஏப்ரல் மற்றும் மே2020இல் நாடு தழுவிய ஊரடங்கு அமல் செய்யப்பட்டதன் காரணமாக, நிலக்கரி, சிமெண்ட், ஸ்டீல், இயற்கை எரிவாயு, எண்ணெய் சுத்திகரிப்பு, கச்சா எண்ணெய் போன்ற பல்வேறு தொழில்கள் குறிப்பிடத்தக்க அளவில் உற்பத்திக் குறைவைச் சந்தித்தன.
பிப்ரவரி 2020இல் எட்டு அடிப்படைத் தொழில்களுக்கான குறியீட்டு எண்ணின் இறுதி வளர்ச்சி விகிதம் மாற்றம் 6.4 சதவீதமாக ஆக திருத்தப்பட்டது. தொழிற்சாலை உற்பத்திக் குறியீட்டு எண்ணில் (IIP) உள்ளடக்கப்பட்ட தொழில்களில் எட்டு அடிப்படைத் தொழில்களும் 40.27 சதவிகிதப் பங்கு வகிக்கின்றன.