ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் இணைந்த 20 மாநிலங்கள்: 2021 மார்ச் முதல் நாடுமுழுவதும் அமல்

ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் இணைந்த 20 மாநிலங்கள்: 2021 மார்ச் முதல் நாடுமுழுவதும் அமல்
Updated on
1 min read

2021-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்து விடும் என மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை தெரிவித்துள்ளது.

ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, ஆந்திரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத், டாமன் – டையூ(தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி), ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, சிக்கிம், மிசோரம், மற்றும் திரிபுரா என 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை
திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

எஞ்சிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 31 மார்ச் 2021-க்குள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு, நாடு முழுவதும், ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும். எஞ்சிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை திட்ட செயலாக்க வேகப்படுத்தப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள மாநிலங்களில் பெரும்பாலானவை, டிசம்பர் 2020-க்குள் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in