Published : 30 Jun 2020 09:35 am

Updated : 30 Jun 2020 09:35 am

 

Published : 30 Jun 2020 09:35 AM
Last Updated : 30 Jun 2020 09:35 AM

சாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதித் திட்டம்: இணைய தளம் தொடக்கம்

pm-street-vendors-atmanirbhar-nidhi-portal-launch

புதுடெல்லி

பிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதித் திட்டத்திற்கான இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களின் செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா பிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதித்திட்டதிற்கான “PM SVANidhi” இணைய தளத்தை, மாநிலங்கள் / யூனியன் பிரதேச அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், இணையக் கட்டண சேவை வழங்குபவர்கள் மற்றும் பிற பயனாளிகள் முன்னிலையில் வெளியிட்டார். டிஜிட்டல் தொழில்நுட்பத் தீர்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம், திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறுவதற்காக பயனர்களுக்கு தகவல் தொழில்நுட்ப இடைத்தளம் மூலம் ஒருங்கிணைந்த இணைய சேவையை வழங்குகிறது.

இந்த நிதி தொடங்கப்பட்டதிலிருந்து, அமைச்சகம் பல்வேறு வகையான கடன் வழங்குபவர்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தியது, வங்கிகள், குறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள். அவர்களிடம் பெறப்பட்ட பரிந்துரைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, கடன் வழங்குபவர்களுக்கான விரிவான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

விரைவில், அனைத்து கடன் வழங்குநர்களும் இந்தத் திட்டத்தை விரிவாக இயக்க, வழிகாட்டுதல்களை தங்கள் கள அலுவலகங்களுக்கும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திட்ட நிர்வாகத்திற்கான அரசு – பயனாளர்கள் வரையான நேரடித் தீர்வை வழங்குவதற்கான ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பத் தளம் ( (pmsvanidhi.mohua.gov.in) சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி இந்தியாவால் உருவாக்கப்பட்டு வருகிறது,

இது PM SVANidhiஇன் திட்ட செயல்படுத்தலின் பங்குதாரராக உள்ளது. போர்டல் பல திட்டச் செயல்பாடுகளை எளிதாக்கும். கடன் விண்ணப்ப விபரங்கள், மொபைல் பயன்பாடு, இணையம் வாயிலாக உங்கள் விண்ணப்பதாரர்களின் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் (e – KYC), இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI), உதயமித்ரா, இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டு ஸ்தாபனம் (NPCI), குறைந்த கடன் மற்றும் குறைந்த வட்டி துணை அணுகலுக்கான இணைய தளம் (PAiSA), கடன் வழங்குநர்கள், மாநிலங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs) மற்றும் பிற பயனர்கள், கணக்கீடு டிஜிட்டல் சலுகைகள் மற்றும் வட்டி மானியம் செலுத்துதல் போன்றவை அதில் அடங்கும்.

PM SANNidhi இணைய தளம் ஜூலை 2 முதல் சாலையோர வியாபாரிகள் கடன் விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கும், அவர்கள் நேரடியாகவோ அல்லது பொதுச்சேவை மையம் / நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் / சுய உதவிக் குழுக்களின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

கடன் வழங்குநர்கள் மற்றும் அவற்றின் முகவர்கள் பயன்பாட்டுத் தோற்றத்திற்காகப் பயன்படுத்த, e-KYC பகுதி மற்றும் கடன் விண்ணப்ப விவரம் தெரிந்து கொள்ளும் சிறப்பம்சங்கள் கொண்ட மொபைல் பயன்பாடு இந்த வாரத்தில் வெளியிடப்படும். பல்வேறு கடன் வழங்குநர்களுடனான இணைய ஒருங்கிணைப்பு இந்த வாரத்தில் தொடங்கும், அடுத்த சில வாரங்களில் அனைத்து முக்கிய கடன் வழங்குநர்களுடனும் இந்த ஒருங்கிணைப்புகள் முடியும் என தெரிகிறது. .

சாலையோர வியாபாரிகள் சம்பந்தப்பட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்பின் பரிந்துரைக் கடிதம் (LoR) க்கு நேரடியாக விண்ணப்பிக்க உதவும் மாதிரி படிவம் ஜூலை 10, 2020க்குள் தயாராக இருக்கும்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

புதுடெல்லிசாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதித் திட்டம்இணைய தளம் தொடக்கம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author