Published : 27 Jun 2020 08:49 PM
Last Updated : 27 Jun 2020 08:49 PM

என்டிபிசி லாபம் நடப்பு நிதியாண்டில் 14.15% அதிகரிப்பு

மின்ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்தியப் பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் கழகம் லிமிடெட் மெகாவாட் நிறுவு திறனை மொத்தமாகக் கொண்டு நாட்டின் மிகப்பெரும் மின் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனம் 2020 நிதியாண்டுக்கான கணக்கை 27 ஜூன் 2020 அன்று வெளியிட்டுள்ளது. அதனுடன் 2020 நிதியாண்டின் 4ஆம் காலஆண்டுக்கான தணிக்கைச் செய்யப்படாத நிதிக் கணக்கையும் சேர்த்து வெளியிட்டுள்ளது.

2020 நிதியாண்டில் தேசிய அனல் மின் கழகம் லிமிடெட் இதுவரை இல்லாத சாதனையாக வர்த்தகரீதியிலான மின் உற்பத்திக்கான நிறுவு திறனை 8260 மெகாவாட் என்ற அளவுக்கு சேர்த்துக் கொண்டுள்ளது. தெஹ்ரி நீர் மின் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் வடகிழக்கு மின்சக்திக் கழகம் ஆகியவற்றிடம் இருந்து 2970 நிறுவு திறனை கையகப்படுத்திக் கொண்டதும் இதில் அடங்கும்.

2020 நிதியாண்டில் தேசிய அனல் மின் கழகக் குழுமம் மொத்தமாக உற்பத்தி செய்துள்ள மின்சார அளவு 290.19 பில்லியன் யூனிட்டுகள் ஆகும். கடந்த ஆண்டில் உற்பத்தி 305.90 பில்லியன் யூனிட்டுகள் ஆகும். இதனோடு கூடுதலாக தெஹ்ரி நீர் மின் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் மற்றும் வடகிழக்கு மின்சக்திக் கழகம் ஆகியவற்றின் மொத்த உற்பத்தி 10.91 பில்லியன் யூனிட்டுகள் ஆகும்.

தனி நிறுவனமாக தேசிய அனல் மின் கழகத்தின் 2020 நிதியாண்டுக்கான மொத்த உற்பத்தி 259.62 பில்லியன் யூனிட்டுகள் ஆகும். கடந்தாண்டு உற்பத்தி 274.45 பில்லியன் யூனிட்டுகள் ஆகும். நிலக்கரி அனல் மின்உற்பத்தி நிலையங்கள் தொழிற்சாலையினுடைய லோட் ஃபேக்டர் குறிப்பிட்ட காலகட்டத்தில் செய்யப்பட்ட உற்பத்தி அளவுக்கும் எந்த அளவு அதிகபட்சமாக அந்தக் காலகட்டத்தில் உற்பத்தி செய்ய முடியுமோ அந்த அளவுக்கும் இடையிலான விகிதம்) சாதனை அளவாக 68.20 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. ஆனால் தேசிய சராசரி அளவு 55.89 சதவீதம் மட்டுமே ஆகும். உற்பத்திக்காலக் காரணி 89.67 சதவீதமாக இருந்தது.

2020 நிதியாண்டில் மொத்த வருமானம் ஒரு லட்சம் கோடி என்ற அளவைத் தாண்டி ரூபாய் 100,478.41 கோடி என்ற அளவை எட்டியுள்ளது. 2019 நிதியாண்டில் வருமானம் ரூபாய் 92,179.56 கோடி ஆகும். அதாவது வருமானம் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020 நிதியாண்டின் நான்காம் காலாண்டின் மொத்த வருமானமான ரூபாய் 28,278.75 கோடியை 2019 நிதியாண்டின் நான்காம் காலாண்டின் மொத்த வருமானமான ரூபாய் 22,545.61 கோடியோடு ஒப்பிட இது 25.43 சதவீதம் அதிகம் ஆகும்.

2019 நிதியாண்டின் வரிக்கு முன்பான லாபம் ரூ.12,672.52 கோடியோடு ஒப்பிட 2020 நிதியாண்டின் வரிக்கு முன்பான லாபம் ரூ. 14,465.92 கோடி என்பது 14.15 சதவீதம் அதிகம் ஆகும். 2019 நிதியாண்டின் நான்காம் காலாண்டின் வரிக்கு முன்பான லாபம் ரூபாய் 3,537.17 கோடி என்பதோடு ஒப்பிட 2020 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் வரிக்கு முன்பான லாபம் ரூபாய் 4,383.77 கோடி என்பது 23.93 சதவீதம் அதிகமாகும்.

வரிக்குப் பின்பான லாபம் 2020 நிதியாண்டில் ரூ.10,112.81 கோடி ஆகும். 2019 நிதியாண்டின் வரிக்குப் பின்பான லாபம் ரூபாய் 11,749.89 கோடி ஆகும். தேசிய அனல் மின் கழகம் லிமிட்டெட்டின் இயக்குநர்கள் குழு செலுத்தப்பட்ட மூலதனப் பங்கிற்கான இறுதி ஈவுத்தொகையை @ 26.5% என்ற அளவில் வழங்க பரிந்துரை செய்துள்ளது.

அதாவது 2020 நிதியாண்டிற்கு ரூபாய் 10 முகமதிப்புக் கொண்ட ஒவ்வொரு பங்கிற்கும் ரூ.2.65 வழங்கப்படும். வருடாந்திரப் பொதுக்குழு கூட்டத்தில் பங்குதாரர்களின் அனுமதியைப் பொறுத்து இந்த ஈவுத்தொகையானது வழங்கப்படும். நிறுவனமானது இடைக்கால ஈவுத்தொகையை @ 5% என்ற அளவில் செலுத்தப்பட்ட மூலதனப் பங்கிற்காக மார்ச் 2020இல் வழங்கியுள்ளது. அதாவது ஒவ்வொரு சமமான பங்கிற்கும் ரூ.0.50 ஈவுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. நிறுவனம் ஈவுத்தொகையை தொடர்ச்சியாக 27 ஆண்டுகளாக வழங்கி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x