Published : 26 Jun 2020 05:37 PM
Last Updated : 26 Jun 2020 05:37 PM

மிதமான வண்ணப் பார்வைக் குறைபாடு கொண்டவர்களும் இனி ஓட்டுநர் உரிமம் பெறலாம்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

லேசான அல்லது மிதமான வண்ணப் பார்வைக் குறைபாடு கொண்டவர்களும் இப்போது ஓட்டுநர் உரிமம் பெற முடியும்.

ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதில் லேசான மற்றும் மிதமான வண்ணப் பார்வைக் குறைபாடு கொண்ட மக்களுக்கு உதவுவதற்காக, மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இன் FORM 1 மற்றும் FORM 1A ஐ திருத்துவதற்கான அறிவிப்பை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

24, 2020 ஜூன் தேதியிட்ட பொது சட்ட விதிகள் 401 (இ) என்பது அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட ஒரு எளிதாக்கப்பட்ட சமூக ஒழுங்குமுறை ஆகும். மாற்றுத் திறனாளிகள் போக்குவரத்து தொடர்பான சேவைகளைப் பெறவும், குறிப்பாக ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவது தொடர்பாகவும் அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாற்றுத் திறனாளிகள் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்காக சில ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், ஒரு கண்ணில் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் ஏற்கனவே ஆலோசனை வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

உடல் தகுதி (FORM I) மற்றும் மருத்துவ சான்றிதழ் (FORM IA) பற்றிய அறிவிப்பில் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமையின் காரணத்தால் வண்ணப்பார்வைக் குறைபாடு உள்ள குடிமக்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியாது என்ற கோரிக்கைகளை அமைச்சகம் பெற்றது.

இந்தப் பிரச்சினை மருத்துவ நிபுணர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆலோசனை பெறப்பட்டது. லேசான முதல் மிதமான பார்வை வண்ணக்குறைபாடு உடையவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும் எனவும், கடுமையான பார்வை வண்ணக் குறைபாடு உடையவர்கள் வாகனம் ஓட்டுவதை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும். என்ற பரிந்துரைகளும் பெறப்பட்டன. இது உலகின் பிற பகுதிகளிலும் அனுமதிக்கப்படுகிறது. அதன்படி கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x