Published : 26 Jun 2020 05:26 PM
Last Updated : 26 Jun 2020 05:26 PM

வரி வருவாய் குறைவு: தீர்வு காண்பது குறித்து நிதி ஆணையம் ஆலோசனை

புதுடெல்லி

மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி வருவாய் வசூல்கள் மீது பொருளாதாரக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறை விளைவுகள் குறித்தும் நிதி ஆணையத்தின் ஆலோசனை கவுன்சில் விவாதித்தது.

தனது ஆலோசனைக் குழுவுடன் பதினைந்தாவது நிதி ஆணையம் தற்போது எதிர்நோக்கியுள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தது.

பதினைந்தாவது நிதி ஆணையத்தின் தலைவர் என்.கே. சிங் தலைமையேற்ற இந்தக் கூட்டத்தில், ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களும், மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், ஆலோசனைக் குழுவில் இருந்து கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், சஜ்ஜித் Z சினாய், டாக்டர். பிரச்சி மிஷ்ரா, நீல்காந்த் மிஷ்ரா மற்றும் டாக்டர். ஓம்கார் கோசுவாமி ஆகியோரும், சிறப்பு அழைப்பாளராக டாக்டர். ரத்தின் ராயும் கலந்துக் கொண்டனர். 26 ஜூன், 2020 அன்று நடைபெற்றக் கூட்டத்தில், ஆலோசனைக் குழுவில் இருந்து டாக்டர். அர்விந்த் விர்மானி, டி.கே. ஸ்ரீவத்சவா, டாக்டர். எம். கோவிந்த ராவ் மற்றும் டாக்டர். சுதிப்டோ முண்ட்லே ஆகியோர், டாக்டர். ஷங்கர் ஆச்சார்யா மற்றும் டாக்டர். ப்ரொனாப் சென் ஆகியோருடன் கலந்துக் கொண்டனர்.

2020-21-ஆம் ஆண்டுக்கான அறிக்கையை பதினைந்தாவது நிதி ஆணையம் சமர்பித்தப் பிறகு நடைபெறும் மூன்றாவது கட்டக் கூட்டமும், கொவிட்-19 பெருந்தொற்றால் தேசியப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து நடைபெறும் இரண்டாவது கூட்டமும் இதுவாகும்.

ஆணையத்தை தாங்கள் ஏப்ரலில் சந்தித்தப் பிறகு, மே இறுதி வரை தேசிய பொதுமுடக்கம் மேலும் நீட்டிக்கப்பட்டதென்றும், கட்டுப்பாடுகள் தற்போது படிப்படியாகத் தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆனால், பொருளாதாரத்தின் மீதும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி நிலைமைகளின் மீதும் பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள தாக்கம் இன்னும் கூட மிகவும் நிச்சயமற்றதாகவே இருக்கிறது. 2020-21-ஆம் ஆண்டுக்கான தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணிப்புகளை பல்வேறு ஆய்வாளர்களும், சிந்தனை மையங்களும் குறைத்துள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள தனி நபர் இடைவெளி நடவடிக்கைகளாலும், பல்வேறு இடங்களில் இருக்கும் உள்ளூர் அளவிலானக் கட்டுப்பாடுகளாலும், விநியோகச் சங்கிலிகள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாமல், மீண்டெழும் செயல்பாட்டை பாதிக்கிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி வருவாய் வசூல்கள் மீது பொருளாதாரக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறை விளைவுகள் குறித்தும் ஆலோசனக் குழு விவாதித்தது. பெருந்தொற்றால் வரி வசூல் கணிசமாக பாதிக்கப்படும் என்று கூறிய சில உறுப்பினர்கள், பெருந்தொற்றால் வரி வசூல் மீது ஏற்படக்கூடிய தாக்கம் சமச்சீரற்ற முறையில் இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டினர்.

பெருந்தொற்றுக்குப் பின்னர் பொதுக் கடனை ஒருங்கிணைப்பதற்கு வழி ஒன்றை உருவாக்குவதற்கான சாத்தியங்களையும், அதில் உள்ள சிக்கல்களையும் விவாதித்த குழுவினர், அரசின் பற்றாக்குறைகள் மற்றும் கடனின் விளைவுகள் குறித்தும் ஆலோசித்தனர்.

செலவினங்களைப் பொறுத்த வரை, சுகாதாரம், ஏழைகளுக்கு ஆதரவு மற்றும் இதரப் பொருளாதாரக் காரணங்களுக்காக அரசுக்கு கணிசமான செலவுகள் இருக்கும்.

வரும் காலங்களில் பெரும் நிச்சயமற்றத் தன்மை இருக்கும் என்று தெரிவித்த ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், ஐந்து ஆண்டு காலத்துக்கு நிதிப் பரிவர்த்தனைகளை வடிவமைப்பதில் எதிர்கொள்ளும் பெரும் சவால்களுக்காக ஆணையத்தைப் பாராட்டினர். முடிந்த அளவுக்கு சிறப்பான மதிப்பீட்டை செய்வதற்காக, பொருளாதார மற்றும் நிதி முனைகளில் அவ்வப்போது எழும் குறியீடுகளை ஆணையமும், ஆலோசனைக் குழுவும் உடனுக்குடன் கூர்ந்து கண்காணிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x