Published : 23 Jun 2020 03:44 PM
Last Updated : 23 Jun 2020 03:44 PM

அரசு மின்னணு சந்தையில் பொருட்கள் விற்பனைக்கு நாட்டின் பெயர் கட்டாயம்: சுயசார்பு திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை  

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் சிறப்பு துணை அமைப்பான அரசு மின்னணு சந்தை இடம் (ஜிஇஎம்), அனைத்து புதிய உற்பத்தி பொருள்களை விற்பனை செய்பவர்கள் இதற்காக பதிவு செய்யும் போது, தங்களது நாட்டின் பெயரைக் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்கியுள்ளது.

இந்தப் புதிய முறை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, தங்களது பொருள்களைப் பதிவேற்றம் செய்தவர்களும், அவ்வப்போது தங்களது சொந்த நாட்டின் பெயரைக் குறிப்பிட வேண்டும் என்றும், இதனைச் செய்யாதவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் ஜெம் எச்சரித்துள்ளது. ‘மேக் இன் இந்தியா’, ‘சுயசார்பு இந்தியா ‘இயக்கங்களைப் பிரபலப்படுத்துவதற்காக இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி பொருள்களில் உள்ளூர் பொருள்களின் பங்கு என்ன என்பதைக் குறிக்கும் வகையிலான பிரிவை ஜெம் (GeM) ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறைப்படி, சந்தைஇடத்தில் உள்ள அனைத்துப் பொருள்களிலும், அதன் தயாரிப்பு நாடு, உள்ளூர்ப் பொருள்களின் சதவீத அளவு ஆகியவை இடம் பெற்றிருக்கும். மிகவும் முக்கியமாக, ‘மேக் இன் இந்தியா’ வடிகட்டிக்கான வசதி தளத்தில் இடம் பெற்றுள்ளது.

குறைந்தபட்சம் 50 சதவீத உள்ளூர் உள்ளீடு இடம் பெற்றிருப்பதை உறுதிசெய்து வாங்குபவர்கள் பொருள்களைத் தேர்வு செய்ய முடியும். ஏல முறைகளில், வாங்குபவர்கள் தரம் 1 உள்ளூர் விநியோகஸ்தர்களுக்காக ( உள்ளூர் உள்ளீடு 50 சதவீதத்திற்கும் மேல்) ஒதுக்கிக் கொள்ளலாம். இந்திய ரூபாய் மதிப்பில் 200 கோடிக்கு குறைவான ஏலங்களில், தரம்1, தரம் 2 உள்ளூர் விநியோகஸ்தர்கள் ( உள்ளூர் உள்ளீடு முறையே 50% க்கும் அதிகம், 20%க்கும் அதிகம்) மட்டும் தகுதி பெறுவர். இதில் தரம் 1 விநியோகஸ்தர் கொள்முதல் முன்னுரிமை பெறுவார். ஜெம் தளத்தின் உள்ளூர் உள்ளீட்டுக்கான அம்சங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஜெம்முறை செயல்பாட்டுக்கு வந்தது முதல், ‘மேக் இன் இந்தியா’ முயற்சியைப் பிரபலப்படுத்துவதில் அது தொடர்ந்து பணியாற்றி வருகிறது. ‘மேக் இன் இந்தியா’ முறையை அமல்படுத்தும் அதேநேரத்தில், பொது கொள்முதலில் உள்ளூர் சிறிய விற்பனையாளர்கள் பதிவு செய்வதற்கான வசதி சந்தை இடத்தில் உள்ளது. அந்த வகையில், இந்திய அரசின் எம்எஸ்இ கொள்முதல் முன்னுரிமை கொள்கைகள் உண்மையான உணர்வுடன் இதில் வெளிப்படுகிறது.

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு, அரசு அமைப்புகளுக்கு, உற்பத்திப் பொருள்கள் மற்றும் சேவைகள் மிகவும் அவசியமாகத் தேவைப்படும் இத்தருணத்தில், ஜெம், விரைவான, திறன் மிக்க, வெளிப்படையான, செலவு குறைவான கொள்முதலுக்கு வகை செய்கிறது. அரசு பயனாளர்கள் ஜெம் மூலம் கொள்முதல் செய்வதற்கு அங்கீகரிக்கப்படுள்ளனர். இதற்காக மத்திய நிதி விதிமுறைகள் ,2017-இல் புதிய விதியான 149 சேர்க்கப்பட்டதன் மூலம், நிதி அமைச்சகம் இதனைக் கட்டாயமாக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x