Published : 23 Jun 2020 15:32 pm

Updated : 23 Jun 2020 15:32 pm

 

Published : 23 Jun 2020 03:32 PM
Last Updated : 23 Jun 2020 03:32 PM

பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி; மே மாதத்தில் சரிவு

crude-oil

புதுடெல்லி

பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி மே மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய்: 2020 மே மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2602.40 ஆயிரம் மெட்ரிக் டன்கள் (TMT) எனும் அளவாக இருந்தது. இலக்கைக் காட்டிலும் இது 3.46 சதவீதம் குறைவு, 2019 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 7.06 சதவீதம் குறைவு. 2020இல் ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்தில் மொத்தக் கச்சா எண்ணெய் உற்பத்தி 5148.22 ஆயிரம் மெட்ரிக் டன்கள் (TMT) ஆக இருந்தது. இது இலக்கை விட 2.47 சதவீதம் குறைவு, முந்தைய ஆண்டை விட 6.71 சதவீதம் குறைவு.

இயற்கை எரிவாயு: 2020 மே மாதத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி 2300 MMSCM (Million Metric Standard Cubic Meters) அளவாக இருந்தது. இது மாதத்திற்கான இலக்கைவிட 11.32 சதவீதம் குறைவு. 2019 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 16.02 சதவீதம் குறைவு. 2020இல் ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்தில் மொத்த உற்பத்தி 31179.96 4461.33 (Million Metric Standard Cubic Meters) ஆக இருந்தது. இது இலக்கைவிட 11.11 சதவீதம் குறைவாகவும், முந்தைய ஆண்டைவிட 17.30 சதவீதம் குறைவாகவும் இருந்தது.

சுத்திகரிப்பு செய்த கச்சா எண்ணெய்: 2020 மே மாதத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட எண்ணெயின் அளவு 16347.13 ஆயிரம் மெட்ரிக் டன் (TMT) ஆக இருந்தது. இது அந்த மாதத்திற்கான இலக்கைவிட 22.88 சதவீதம் குறைவு. 2019 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 24.24 சதவீதம் குறைவு. 2020 ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்தில் சுத்திகரிப்பு அளவு 31092.30 ஆயிரம் மெட்ரிக் டன் (TMT) ஆக இருந்தது. இது இலக்கை விட 22.47 சதவீதம் குறைவு. முந்தைய ஆண்டை விட 26.46 சதவீதம் குறைவு.

மற்ற பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்தி: 2020 மே மாதத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பெட்ரோலிய தயாரிப்புகளின் உற்பத்தி அளவு 17281.78 ஆயிரம் மெட்ரிக் டன் (TMT) ஆக இருந்தது. இது அந்த மாதத்திற்கான இலக்கை விட 20.15 சதவீதம் குறைவு. 2019 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 21.26 சதவீதம் குறைவு. 2020 ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்தில் சுத்திகரிப்பு அளவு 33241.59 ஆயிரம் மெட்ரிக் டன் (TMT) ஆக இருந்தது. இது இலக்கை விட 18.98 சதவீதம் குறைவு. முந்தைய ஆண்டை விட 22.68 சதவீதம் குறைவு.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்திமே மாதத்தில் சரிவுபுதுடெல்லிCrude oil

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author