அரசாங்கத்தின் முதல் குறிக்கோள் சீர்திருத்தமே: அமெரிக்க தொழிலதிபர்களிடம் பிரதமர் மோடி தகவல்

அரசாங்கத்தின் முதல் குறிக்கோள் சீர்திருத்தமே: அமெரிக்க தொழிலதிபர்களிடம் பிரதமர் மோடி தகவல்
Updated on
1 min read

அரசாங்கத்தின் முதல் முக்கிய குறிக்கோள் சீர்த்திருத்தங்களை கொண்டு வருவதுதான் என்று அமெரிக்கா நிறுவனங்களின் தலை மைச் செயல் அதிகாரிகளிடம் பிரத மர் நரேந்திரமோடி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைமைச் செயல் அதிகாரிகளின் நிறுவனங்களின் மதிப்பு 4.5 லட்சம் கோடி டாலராகும். பார்சூன் 500 நிறுவனங்களில் உள்ள 40 நிறுவனங்களின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

மேலும் அவர் கூறியதாவது.

நாங்கள் பல விதிமுறைகளை எளிமையாக்கி இருக்கிறோம். வேக மாக முடிவெடுக்கிறோம். எங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை உள்ளது என கடந்த ஓராண் டில் மத்திய அரசு செய்தவற்றை தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்களிடம் விளக்கினார்.

பெரும்பாலான நாடுகளில் அந் நிய நேரடி முதலீடு குறைந்திருக் கிறது. ஆனால் இந்தியாவில் மட் டும் அந்நிய நேரடி முதலீடு 40 சத வீதம் உயர்ந்திருக்கிறது. இது இந்தி யாவின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர் பாளர் விகாஸ் ஸ்வரூப் ஒவ்வொரு தலைமைச் செயல் அதிகாரிகளின் கருத்துகளையும் கேட்டறிந்தார். இந்தியாவை பொருத்தவரை அவர் களின் திட்டம் என்ன, இந்தியாவில் என்ன பிரச்சினைகளை சந்திக்கிறார் கள் அதை எப்படி சரி செய்வது என்பது குறித்து சிஇஒகளின் கருத்துகளை கேட்டனர்.

பொதுவாக இந்தியாவை பற்றிய அவர்களின் (சிஇஓ) மனநிலை நன்றாகவே உள்ளது.பிரதமர் மோடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் என்பதில் அவர்களிடன் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இன்னும் வேகமாக மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள் என விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.

இந்தியா இப்போது சிறப்பான நிலையில் இருப்பதாக பெரும் பாலானவர்கள் கருத்து தெரி வித்ததாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அருண் கே.சிங் தெரிவித்தார். டிஜிட்டல் தொழில் நுட்பம் வருங்காலத்தில் இந்தியா வுக்கு பெரிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, மரபுசாரா எரிசக்தியில் கவனம் செலுத்துவது ஆகியவற்றை குறித்து பெரும்பாலான சிஇஓகள் பாராட்டு தெரிவித்தார்கள் எனவும் சிங் கூறினார்.

இதற்கிடையே கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் என்ன செய்யப்பட்டது என்பது குறித்து எழுத்து பூர்வமாக அனைவருக் கும் தகவல் பரிமாறப்பட்டது. பெரும்பாலான சிஇஓகள் கடந்த வருடத்தில் பல மாற்றங்கள் செய் யப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்தனர். தவிர தொழில் புரி வதற்கான சூழலை மேம்படுத்து வதற்கு பல கருத்துகளை சிஇஓகள் தெரிவித்தனர்.

போர்ட் நிறுவனத்தின் தலைவர் மார்க் பீல்ட்ஸ், ஐபிம் நிறுவனத்தின் தலைவர் கின ரோமெட்டி, பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி, டவ் கெமிக்கல் நிறுவனத்தின் தலைவர் ஆண்ட்ரூ லிவெரிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in