Published : 20 Jun 2020 09:44 PM
Last Updated : 20 Jun 2020 09:44 PM

மோட்டார் வாகன விதிகளைத் திருத்துவதற்கான ஆலோசனைகள்: மத்திய அரசு வலியுறுத்தல்

பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களை இயக்குவது தொடர்பாக அண்டை நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ள வசதியாக மோட்டார் வாகன விதிகளைத் திருத்துவதற்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களை இயக்குவது தொடர்பாக அண்டை நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ள வசதியாக மோட்டார் வாகன விதிகளைத் திருத்தும் உத்தேசத்துக்கான ஆலோசனைகளை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், பொதுமக்கள் உள்பட அது தொடர்பான அனைத்து பிரிவினரின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வரவேற்றுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை, கடந்த 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை www.morth.gov.in. என்ற தளத்தில் காணலாம்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலும், அண்டை நாடுகளில் இருந்தும், அவ்வப்போது பயணிகளையும், சரக்குகளையும் ஏற்றி வரும் வாகனங்களின் இயக்கத்துக்கு வசதியாக, 1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவுகளில், திருத்தம் செய்வது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் அரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து வந்த வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டு, அமைச்சகம், 2020 ஜூன் 18 தேதியிட்ட ஜிஎஸ்ஆர் 392 வரைவு அறிவிக்கையை வெளியிட்டது.

அமிர்தசரஸ் – லாகூர் இடையே (2006-இல்) , புதுதில்லி –லாகூர் இடையே (2000-ல்), கல்கத்தா- டாக்கா இடையே (2000-இல்), அமிர்தசரஸ்-நன்கானா சாகிப் இடையே (2006-இல்) பேருந்து சேவைக்கான விதிமுறைகளை அமைச்சகம் அறிவித்தது. இந்தியாவுக்கும், அண்டை நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கீழ், சேவைகளை இயக்குவதற்கான அனைத்து விதிமுறைகளும் இறுதியாக்கப்பட்டன. மத்திய

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், பங்களாதேசில் பதிவு பெற்ற திரவ எரிவாயு வாகனங்கள், தொகுப்பு திரவ எரிவாயுவை, திரிபுராவில் உள்ள பிஷல்காரில் உள்ள உருளையில் அடைக்கும் நிலையத்துக்கு கொண்டு செல்லும் வகையில், இந்தியப் பகுதியில் அந்த வாகனங்கள் இயங்கும் வகையிலான, விதிமுறைகள் கொண்ட அறிவிக்கையை 17.10.2018 அன்று வெளியிட்டது.

மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கும், அண்டை நாடுகளுக்கும் இடையே பயணிகள், சரக்கு வாகனங்களை இயக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செயல்படுத்தும் வகையில், இந்திய மாநிலங்களுக்கு இடையிலும், அண்டை நாடுகளிலிருந்தும் பயணிகள் , சரக்கு வாகனங்களை இயக்குவதற்கான நிலையான விதிமுறைகளை வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனைகள் அல்லது கருத்துக்களை, இணைச்செயலர் (எம்விஎல்), சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், போக்குவரத்து பவன், நாடாளுமன்ற வீதி, புதுதில்லி-110001 என்ற முகவரிக்கு (மின்னஞ்சல்; www.morth.gov.in.) 2020 ஜூலை 17-ஆம் தேதி வரை அனுப்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x