Published : 20 Jun 2020 04:05 PM
Last Updated : 20 Jun 2020 04:05 PM

கரீப் கல்யாண் வேலைவாய்ப்புத் திட்டம்: என்னென்ன பணிகள்?

புதுடெல்லி

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் வேலைவாய்ப்புத் திட்டம் எப்படி செயல்படும், என்னென்ன பணிகள் வழங்கப்படும் என விவரம் வெளியாகியுள்ளது.

125 நாட்களுக்கான இந்தத் திட்டம் மிஷன் முறையில் நடைமுறைப்படுத்தப்படும். பீஹார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கும் வகையில் 116 மாவட்டங்களில், இருபத்தி ஐந்து பிரிவுகளில் ஆழ்ந்த கவனத்துடன் பணிகள் நடைமுறைப்படுத்தப்படும்..

இதன் கீழ் மேற்கொள்ளப்படும் பொதுப் பணிகளுக்கென 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதிஆதாரம் அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, சுரங்கம், குடிநீர் தூய்மை, சுற்றுச்சூழல், ரயில்வே, பெட்ரோலியம் இயற்கை எரிவாயு, புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, எல்லைச் சாலைகள், தொலைத் தகவல் தொடர்பு, விவசாயம் ஆகிய 12 அமைச்சகங்கள்/ துறைகள் இணைந்து மேற்கொள்ளும் முயற்சியாக இத்திட்டம் அமையும். 25 கட்டமைப்புப் பணிகள், வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பான பணிகள் ஆகியவற்றை விரைந்து செயல்படுத்த முடிவு செய்ய்பட்டுள்ளன.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், பாதிக்கப்பட்ட கிராமப்புறக் குடிமக்களுக்கும் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்பை வழங்குதல்,
சாலைகள், வீட்டுவசதி, அங்கன்வாடி, பஞ்சாயத்து பவன், சமுதாய வளாகங்கள், வாழ்வாதாரம் தரக்கூடிய சொத்துக்கள் போன்ற பொதுக் கட்டமைப்பு வசதிகளை கிராமப்புறங்களில் உச்சபட்சமாக ஏற்படுத்தி, வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை ஆகும்.

அடுத்த 125 நாட்களில் ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளிக்கும், அவரது திறனுக்கு ஏற்ப, வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பலதரப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். நீண்ட காலத்திற்கு வாழ்வாதாரத்தை விரிவுபடுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் இத்திட்டம் ஆயத்தம் செய்யும்.

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் இத்திட்டத்தை முன்னிருந்து செயல்படுத்தும். இந்தத் திட்டம் அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும். இணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேற்பதவியில் உள்ளவர்கள் இதற்கு முன்னோடி அலுவலராக நியமிக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் பல்வேறு திட்டங்கள் நேர்த்தியாகவும், குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுத்தப்படுவதையும் கண்காணிப்பர்.

கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டம் நடைமுறைபடுத்தப்படும் மாநிலங்களின் பட்டியில் பிஹார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் மொத்தம் 116 மாவட்டங்களில் இந்த பணிகள் நடைபெறவுள்ளன.

முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படவுள்ள பணிகள்

1) சமூக சுகாதார மையம் (சி.எஸ்.சி) கட்டுமானம்

2) கால்நடைக் கொட்டகைகள் அமைத்தல்

2) கிராமப் பஞ்சாயத்து பவனின் (அலுவலக) கட்டுமானம்

3) கோழிக் கொட்டகைகளின் கட்டுமானம்

4) ஆடு கொட்டகைக் கட்டுமானம்

5) தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள்

6) மண்புழு உரம் கட்டமைப்புகள் கட்டுமானம்

7) நீர்ப் பாதுகாப்பு மற்றும் அறுவடைப் பணிகள்

8) ரயில்வே பணிகள்

9) கிணறுகள் வெட்டுதல்

10) ரூர்பன் திட்டம்

11) பயிரிடும் பணிகள்

12) பிரதமர் குசும் (விவசாய எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்)

13) தோட்டக்கலைப் பணிகள்

14) அங்கன்வாடி மையங்களின் கட்டுமானம்

15) கேம்பா திட்டத்தின் கீழ் தோட்டம் அமைத்தல்

16) கிராமப்புற வீடுகள் கட்டும் பணிகள்

17) பிரதமர் உர்ஜா கங்கா திட்டம்

18) கிராமப்புற இணைப்புப் பணிகள்

19) கே.வி.கே வாழ்வாதாரங்களுக்கான பயிற்சி

20) திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைப் பணிகள்

21) மாவட்ட கனிம அறக்கட்டளை அமைக்கும் (டி.எம்.எஃப்.டி) பணிகள்

22) பண்ணைக் குளங்கள் அமைத்தல்
23) பாரத் நெட் திட்டப் பணிகள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x