Published : 19 Jun 2020 08:05 PM
Last Updated : 19 Jun 2020 08:05 PM

வேளாண், ஊரகத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு: தமிழகம் முதலிடம்

புதுடெல்லி

வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில் தமிழகம் முதலிடம் பிடித்தது.

மே மாதத்துக்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இருபதுக்கும் அதிகமான மாநிலங்களில் உள்ள 600 மாதிரி கிராமங்களில் இருக்கும் குறிப்பிட்ட மையங்களுக்கு நேரடியாக சென்று சேகரித்த விலைத் தகவல்களின் அடிப்படையில், வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களை தொழிலாளர் அலுவலகம் ஒவ்வொரு மாதமும் தொகுக்கிறது.

கொவிட்-19-இன் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக, களப் பணியாளர்களின் நேரடித் தகவல் சேகரிப்பு, 19 மார்ச், 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மின்னணு தொடர்பு முறைகளின் மூலம் விலை விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மே மாதத்தில், முடிந்த வரை நேரடியாகவும் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலமும் 4333 கிராமங்களில் இருந்து விலைகள் சேகரிக்கப்பட்டன.

மே மாதத்துக்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் (அடிப்படை: 1986-87=100) முறையே 5 மற்றும் 6 புள்ளிகள் அதிகரித்து 1019 (ஆயிரத்தி பத்தொன்பது) மற்றும் 1025 (ஆயிரத்தி இருபத்து ஐந்து) ஆக இருந்தன. வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களின் பொது குறியீடு அதிகரித்ததில் உணவு பெரும் பங்கு வகித்து, (+) 4.44 புள்ளிகள் மற்றும் (+) 4.70 புள்ளிகளை அளித்தது. அரிசி, துவரம் பருப்பு, மைசூர் பருப்பு, கடலை, எண்ணெய், ஆட்டிறைச்சி, கோழி, காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றின் விலைகள் அதிகரித்ததன் மூலம் இது பெரும்பாலும் சாத்தியமானது.

குறியீட்டின் வளர்ச்சியும்,வீழ்ச்சியும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்டு இருந்தது. வேளாண் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, 14
மாநிலங்களில் இது 2 முதல் 19 புள்ளிகள் வரை அதிகரித்து, 5 மாநிலங்களில் 1 முதல் 7 புள்ளிகள் குறைந்து, ராஜஸ்தானில் மட்டும் நிலையாக நின்றது. 1208 புள்ளிகளோடு தமிழ்நாடு பட்டியலில் முதலிடம் பிடித்த நிலையில், 788 புள்ளிகளோடு இமாச்சல் பிரதேசம் கடைசி இடத்தில் நின்றது.

ஊரகத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, 15 மாநிலங்களில் இது 1 முதல் 18 புள்ளிகள் வரை அதிகரித்து, 5 மாநிலங்களில் 1 முதல் 7 புள்ளிகள் குறைந்தது. 1194 புள்ளிகளோடு தமிழ்நாடு பட்டியலில் முதலிடம் பிடித்த நிலையில், 838 புள்ளிகளோடு ஹிமாச்சல் பிரதேசம் கடைசி இடத்தின் நின்றது.

மாநிலங்களில், வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில், அரிசி, சோளம், ராகி, ஆட்டிறைச்சி, கோழி, காய்கறி மற்றும் பழங்கள், பீடி மற்றும் முடி திருத்துவோர் கட்டணம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பின் காரணமாக கர்நாடகா அதிகபட்ச (முறையே 19 மற்றும் 18 புள்ளிகள்) வளர்ச்சியை சந்தித்தது. அதே சமயம், வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில் அதிகபட்ச வீழ்ச்சியை (தலா -7 புள்ளிகள்), சோளம், வெங்காயம், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றின் விலை குறைந்ததன் மூலமாக பீகார் சந்தித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x